அயோத்தி சாமியார் தலையை சீவினால் நான் 100 கோடி தருகிறேன்..! சீமான் அதிரடி

By Ajmal Khan  |  First Published Sep 6, 2023, 3:23 PM IST

இந்தியாவிற்கு பெயர் பாரத் என்று வையுங்கள் சூரத் என்று வையுங்கள் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை எங்கள் நாடு தமிழ்நாடு என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 


சாமியாரின் தலைக்கு 100 கோடி ரூபாய் நான் தருகிறேன்

கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா ஆகியவற்றை எதிர்க்க முடியாது, ஒழிக்க வேண்டும். அந்த வகையில், சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும் என அமைச்சர் உதயநிதி பேசியதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா உதயநிதியின்  தலைக்கு 10 கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம்,  அமைச்சர் உதயநிதியின் தலையை சீவ பத்து கோடி ரூபாய் சாமியார் நிர்ணயித்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.  

Latest Videos

undefined

இதற்கு பதில் அளித்தவர்,  நான் கூட 100 கோடி ரூபாய் தருகிறேன் சாமியார் தலைய வெட்ட, சாமியார் என்பவர் யார் எல்லாத்தையும் விட்டு விட்டு பற்றற்றவர். அதை விட்டுவிட்டு தலையை வெட்டு, வா நாக்கை வெட்டி வா என்று கூறுவது கசாப்பு கடைக்காரரா அவர் என கேள்வி எழுப்பினார்.  

சக மனிதனை வீழ்த்துவது மன நோய்

உதயநிதி கருத்து சொன்னால் அந்த கருத்துக்கு பதில் சொல்லி மோத வேண்டும், அதுதான் ஜனநாயகம், நான் இந்த கருத்தில் உடன்படவில்லை,  பிறப்பின் அடிப்படையில் பேதம் உள்ளது.  உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பாகுபாடு உள்ளது என பேச வேண்டும். நான் இந்த கருத்தில் உடன்பட மாட்டேன் பாஜகவில் எந்த கொம்பனாதி கொம்பன் சொன்னாலும் நான் உடன்பட மாட்டேன். மனிதப் பிறப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பார்ப்பவன் என் எதிரி தான். யாரின் கையை கிழித்தாலும் ரத்தம் ஒன்றுதான்.

சாமியாருக்கு மதம், ஜாதி இரு கண்கள், மதத்தின் மேல் ஜாதி தான் உண்டு. சாமியார்களிடம் சென்று  நாங்களும் இந்துக்கள் தான் என்று கூட நின்றால் ஒரு பத்து பைசா கூட தர மாட்டார்கள். தன்னைப் போல எலும்பு, ரத்தம், சதை, பசி, உறக்கம், கண்ணீர் என  சக மனிதனை தாழ்த்தி வீழ்த்தி சுகம் காண்பது அதற்குப் பெயர் மனநோய். அதைத்தான் உதயநிதி கொடிய வைரஸ் என சொன்னார்.

இந்தியாவிற்கு சூரத் என பெயர் வைத்துக்கொள்ளுங்கள்

இந்தியாவின் பெயர் மாற்றம் செய்து பாரத் என அழைக்கப்பட இருப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், பாஜக ஆட்சியில் ஏதாவது முன்கூட்டியே அறிவித்து செய்தார்களா என்று ஒன்று கூறுங்கள் எதுவும் செய்யவில்லை.  இந்தியாவிற்கு பெயர் பாரத் என்று வையுங்கள் சூரத் என்று வையுங்கள் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை எங்கள் நாடு தமிழ்நாடு. உங்க நாட்டுக்கு பெயர் வைக்கிறீர்கள் அதைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும். வெள்ளைக்காரன் வைத்த பெயர் இந்து, அதையும் மாற்ற வேண்டியது தானே.

பேர மட்டும் மாற்றி விட்டால் என்ன ஆகப் போகிறது. 150 லட்சம் கோடி கடன் உள்ளது. தள்ளுபடி செய்து விடுவார்களா. இலவச சுகாதாரம், கல்வி, கிடைத்துவிடுமா.? அதை ஏன் இப்போது அறிவிக்கிறீர்கள் வெற்றி பெற்ற பொழுது மாற்றி இருக்க வேண்டியதுதானை. தேர்தல் வருகிறது என்பதால் பாரத் என மாற்றம், சிலிண்டர் விலை குறைப்பு, சந்திரயானில் ராக்கெட் தரையிரங்குகிறது. ஆதித்யா சூரியனுக்கு செல்கிறது. ஆனால் மக்கள் பசியால் வாடுகிறார்கள் என விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

தமிழக பாஜகவை 2 வருடம் என் கையில் கொடுங்கள்...இந்து விரோதிகளை திகார் சிறையில் பார்ப்பீர்கள்- சுப்பிரமணிய சுவாமி

click me!