தமிழக ஆளுநர் எதையாவது உளர கூடாது..! அவர் எப்படி ஐஏஎஸ் ஆனார்னே தெரியலை- இறங்கி அடிக்கும் சீமான்

By Ajmal Khan  |  First Published Oct 30, 2022, 3:28 PM IST

ஆளுநர் ஒண்ணுமே தெரியாமல் உளற கூடாது. ,அவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் , ஆளுநர் ஆனார் என தெரியவில்லை, ரிஷிகள் வேலை நாடு கட்டுவதா? ரிஷி என்பவர் அனைத்தையும் துறந்து செல்வது தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


முத்துராமலிங்க தேவர் குருபூஜை

முத்துராமலிங்க தேவரின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் சாமிநாதன், தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு,சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசைன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார்,பொள்ளாச்சி ஜெயராமன், ஓ.எஸ்.மணியன், சரோஜா,வளர்மதி,பெஞ்சமின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tap to resize

Latest Videos

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 10 கிலோவில் வெள்ளி கவசம்..! இபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஓபிஎஸ்

அரசியல் தலைவர்கள் மரியாதை

அதேபோல காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு,தேமுதிக சார்பில் பொருளார் பிரேமலதா விஜயகாந்த், பாமக சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோர் மலர் தூவி ,மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆளுநர் உளர கூடாது

தெய்வத்திருமகன்
நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப் போற்றுவோம்!

நாம் தமிழர்! https://t.co/5NFBxhRKgu

— சீமான் (@SeemanOfficial)

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், முத்துராமலிங்க தேவர் உண்மையை பேசு,உறுதியாக பேசு அதை இறுதி வரை பேசு என்பதை எங்களுக்கு சொல்லி கொடுத்தவர் என தெரிவித்தார். இந்தியா என்பது ரிஷிகள் மற்றும் முனிவர்களின் ஆன்மிக சிந்தனையில் உருவானது என ஆளுநர் கூறிய கருத்துக்கு பதில் அளித்த அவர்: ஆளுநர் ஒண்ணுமே தெரியாமல் உளற கூடாது. ,அவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் , ஆளுநர் ஆனார் என தெரியவில்லை, ரிஷிகள் வேலை நாடு கட்டுவதா? ரிஷி என்பவர் அனைத்தையும் துறந்து செல்வது தான், இந்தியா என்பது பல்வேறு கலாச்சாரங்களை அடிப்படையாக கொண்டது என தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலின் கேரளாவில் சென்று மாநில சுயாட்சி பேசுகிறார்,இங்கு இரட்டை ஆட்சி நடக்கிறது என சொல்கிறார்கள், இவ்வளவு காவல்துறை அதிகாரிகள் இருக்கும் நேரத்தில் எதற்கு கோவை கார் வெடி விபத்து  வழக்கை தேசிய புலனாய்வுக்கு வழங்கினார்கள் என கேள்வி  எழுப்பியர், இதனை மூலம் அனைத்து உரிமைகளை இழந்து வருவதாக தெரிவித்தார்.

பெரிய பதவிக்காக பாஜகவை மகிழ்விக்கும் ஆளுநர்.! ராஜினாமா செய்து விட்டு கருத்து கூறட்டும்.!திமுக கூட்டணி கட்சிகள்

திமுக கூட்டணி கட்சி அறிக்கை

காவல்துறை தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், பல நபர்கள் காவல்துறை காவிமயம் ஆகியுள்ளது என கூறுகின்றனர் இவர்கள் திமுக என கூறுகின்றனர் என குறிப்பிட்டார்.  ஆளுநர் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் அறிக்கை குறித்து பேசிய அவர்,  மக்களில் இருந்து மக்களுக்காக சேவை செய்பவர்களைதான் ஆளுநராக நியமன செய்ய வேண்டும், ஏதோ ஒரு பதவியில் இருந்து ஆளுநராக மாறும் நபர்களிடம் மக்களுக்கான நியாயம் என்ன இருக்கும் எனவே திமுக கூட்டணி கட்சிகளின் அறிக்கையை ஏற்கிறேன் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

இந்துத்துவா பிரச்சாரம் செய்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி! கொந்தளிக்கும் வைகோ - பின்னணி என்ன ?
 

click me!