யார் பெரிய கட்சி..? நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட நான் தயார்..? பாஜக தயாரா..? சவால் விடும் சீமான்

By Ajmal Khan  |  First Published Nov 29, 2022, 1:37 PM IST

 பாஜக பெண் நிர்வாகிகள் மீது தரைகுறைவாக பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரியாக கையாள வேண்டும். பெண்ணை போற்றாத எந்த நாடும் பெருமை அடையாது என சீமான் தெரிவித்துள்ளார்.


மக்கள் மீது அக்கறை இல்லாத ஆளுநர்

2017 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஈழத் தமிழர் குறித்து பேசியது தொடர்பாக  சீமான் மீது அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையில் சீமானுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து,  சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் ஆளுநருக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. மக்களின் நலன்கருதி எந்தவித முடிவும் எடுக்கமுடியாமல் நகர்ந்து போடுகிறது. இதனால் தான் ஆளுநர்கள் நாட்டிற்கு  அவசியம் இல்லை என்று சொல்கிறோம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி ஒரு முடிவு எடுக்கிறது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஆளுநர் தடுக்கிறார். அப்படி என்றால் எட்டு கோடி மக்களுக்கு மதிப்பு எங்கு உள்ளது? என கேள்வி எழுப்பினார்.

Tap to resize

Latest Videos

24 மணி நேரமும் செயல்படும் டாஸ்மாக்..! அதிக விலைக்கு மதுபானம் விற்கப்படுவது ஏன் ..! ஆர்.பி.உதயகுமார் கேள்வி

மொத்த பயங்கரவாதியும் பாஜக

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாதமாதம் மின் கணக்கு எடுக்கப்படும் என்று கூறினார்கள். தற்பொழுது ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளை தாண்டி விட்டது இரண்டு மாதத்துக்கு ஒருமுறை தான் கணக்கு எடுக்கப்படுகிறது. ஏற்கனவே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது இவ்வளவு கணினி உலகத்தில் டிஜிட்டல் பேசும் திமுக கணக்கெடுப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகிவிடும் என கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி காங்கிரஸில் பயங்கரவாதிகள் இருப்பதாக குற்றம்சாட்டியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த அவர், மொத்த பயங்கரவாதியும் ஆர்எஸ்எஸ், பிஜேபியில்தான் உள்ளார்கள் என்று விமர்சனம் செய்தார். மேலும் பாஜக பெண் நிர்வாகிகள் மீது தரைகுறைவாக பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருகிறது. வருத்தம் அளிப்பதாகவும் கூறினார். 

அதிகரிக்கும் விபத்துகள்..! 8 வழிச்சாலைத்திட்டம் செயல்படுத்திடுக..! திடீர் கோரிக்கை விடுத்த அன்புமணி

தனித்து போட்டியிட தயாரா.?

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது உறுதி வெற்றி பெறுவது மட்டும் தான் எங்கள் இலக்கு என்று கூறிய அவர், பாஜக இங்குள்ள யாராவது ஒருவருடைய காலடியில் நிற்குமே தவிர, அதிமுக பாஜக காலடியில் நிற்காது. பாஜக பெரிய கட்சி என்று கூறுகிறார்கள் தனித்து நிற்க முடியுமா? என்ன சவால் விடுத்தார். 

இதையும் படியுங்கள்

கோவையில் திடீரென குவிந்த போலீசார்..! தீவிர வாகன சோதனை..! என்ன காரணம் தெரியுமா..?

click me!