அதிமுக பொதுக்குழு வழக்கு.. ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Nov 29, 2022, 1:18 PM IST
Highlights

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். 

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் அதிரடியாக நிராகரித்துள்ளது. 

கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த செல்லும் என உயர்நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து  ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கேவியட் மனுத்தாக்கல் செய்தனர். 

இதையும் படிங்க;- அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு.. தேதி குறித்த உச்சநீதிமன்றம்.. பதற்றத்தில் இபிஎஸ்..!

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் செப்டம்பர் 30ம் தேதி விசாரணைக்கு வந்தது.  அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது. இந்த நோட்டீஸ்க்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு கடந்த 21ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, சுதான்சு துலியா அமர்வில் விசாரணைக்கு வந்த போது இபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு விளக்க மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் நவம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், டிசம்பர் 6-ம் தேதி விசாரிக்க இருக்கும் வழக்கை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் கோரிக்கை வைத்தார். ஆனால், ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் திட்டமிட்டபடி டிசம்பர் 6ம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவித்தனர்.

இதையும் படிங்க;-  அதிமுக பொதுக்குழு வழக்கு.. ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம்..!

click me!