தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசினார்.
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவிக்கும், ஆளும் திமுக தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் ரவியை தமிழக பாஜக தலைவர் திடீரென சந்தித்து பேசினார். அப்போது, துணை ராணுவ படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரியும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்தும் ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க;- தமிழக பாஜகவில் பெண்கள் என்றால் ஒரு நீதியும், ஆண்கள் என்றால் ஒரு நீதியா? அண்ணாமலையை அலறவிடும் மநீம..!
undefined
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவின் போது சென்னை வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை. பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன? பிரதமர் வருகையின் போது, மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளில் குறைபாடு இருந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடு குறித்து மத்திய பாதுகாப்பு படையினர் மாநில அரசிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கு யார் காரணமோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தனியாக விசாரணை நடத்த வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
தமிழக உளவுத்துறை தூக்கிக்கொண்டிக்கிறது. மத்திய அரசின் கனவு திட்டமான வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ளது என குற்றம்சாட்டியுள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு இதுவரை அரசாணை கூட பிறப்பிக்கப்படவில்லை. சரியான சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதே ஆளுநரின் பணி. சட்டத்தின் மீதான சில சந்தேகங்களையும் மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதையும் படிங்க;- பாஜக என்ற பேருந்தில் தவறு செய்பவர்கள் இறக்கி விடப்பட்டு, புதியவர்கள் அழைத்துச் செல்லப்படுவர்- அண்ணாமலை