ரஜினி காட்டுவது பாபாவின் முத்திரை இல்லை. அது தீமையின் குறியீடு என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தமிழ்நாட்டில் பேசப்பட்டு வருகிறது. ரஜினியின் அரசியல் வருகைக்காக அவரது ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர். இந்நிலையில், அவரது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அண்மையில் தனது அரசியல் வருகையை ரஜினி உறுதி செய்தார். அரசியல் கட்சி தொடங்கி அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தார் ரஜினி.
undefined
ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு வரவேற்பும் எதிர்ப்பும் சம அளவில் உள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கடுமையாக எதிர்ப்பவர்களில் மிக முக்கியமானவர் சீமான். ரஜினியின் அரசியல் பிரவேசத்தை சீமான் கடுமையாக விமர்சித்துவருகிறார். ரஜினி ஆன்மீக அரசியல் செய்ய வேண்டுமென்றால், காவி உடை அணிந்து காட்டுக்குள் சென்று தவம் செய்யட்டும் என விமர்சித்திருந்தார். இந்நிலையில், பாபாவின் முத்திரை என்று ரஜினி காட்டும் முத்திரைக்கு புதிய விளக்கம் ஒன்றை சீமான் அளித்துள்ளார்.
இந்நிலையில், பாபாவின் முத்திரை என்று ரஜினி காட்டும் முத்திரைக்கு புதிய விளக்கத்தை சீமான் அளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சீமான், முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஒபாமா மற்றும் மற்ற சில வெளிநாட்டு தலைவர்கள் அந்த முத்திரையை காட்டும் புகைப்படங்களை காட்டி விளக்கினார். ரஜினி காட்டுவது பாபாவின் முத்திரை அல்ல. அது தீமையின் குறியீடு. அது, பாபாவின் முத்திரை என்றால் ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா உள்ளிட்டோர் ஏன் அந்த முத்திரையை காட்டியுள்ளனர் என சீமான் கேள்வி எழுப்பினார்.
அவர்களுக்கும் பாபாவுக்கும் என்ன தொடர்பு? எதுவும் கிடையாது. நானும் உங்க ஆளுதான் என்பதை காட்டும் விதமாகத்தான் அந்த முத்திரை உள்ளது. அது பாபாவின் முத்திரை அல்ல. தீமையின் குறியீடு என சீமான் தெரிவித்தார்.
ஏற்கனவே ரஜினியின் ஆன்மீக அரசியல் என்ற கூற்று, தமிழகத்தின் பிரதான பேசுபொருளாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் காட்டும் முத்திரைக்கு சீமான் புதிய விளக்கத்தை அளித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.