ரஜினி ரசிகர் மன்றம் இனி "ரஜினி மக்கள்  மன்றமாம்!

First Published Jan 6, 2018, 4:02 PM IST
Highlights
Rajini mandram name changed as rajini makkal mandram


இப்போது வருவார், அப்போது வருவார் என காத்திருந்து, ஒரு வழியாக ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டார். தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த 31ம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களின் முன்னிலையில் அறிவித்தார்.

ரஜினிக்கு அரசியல் வருகைக்கு ஆதரவாகவும், விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அரசியலுக்கு வருவதை முன்னிட்டு திமுக தலைவர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் கவுதமானந்தா உள்ளிட்டோரைச் சந்தித்து ரஜினிகாந்த் ஆசியும் பெற்றுள்ளார். ரஜினியின் கட்சிப் பெயர் பொங்கலுக்குள் அறிவிக்கப்படும் என்று அவரது சகோதரர் ஏற்கனவே சூசகமாகத் தெரிவித்திருந்தார் .

இந்த நிலையில் இன்று அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் பெயர், ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ரஜினிகாந்தின் கட்சியின் பெயர் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஸ்டம் சரியில்லை, போர் புரிய தயாராகுங்கள் என தனது அரசியல் நிலைப்பாட்டை கடந்த மே மாதம்ரசிகர்களை சந்தித்த போது தெரிவித்த ரஜினி அதன் பின்னர் மவுனம் காத்து வந்தார்.பொது பிரச்சனைக்களுக்கு கூட அவரிடமிருந்து எந்தவிதமான கருத்துகளும் வரவில்லை.

இந்நிலையில் இரண்டாவது கட்டமாக கடந்த 26ம் தேதி ரசிகர்களை சந்தித்த ரஜினி 31ம் தேதி தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்போவதாக தெரிவித்தார். அதன்படி தனிக்கட்சி தொடங்க போவதாகவும், சட்டமன்ற தேர்தலில் 234தொகுதிகளிலும் போட்டியுடுவேன் என அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து ரஜினி இந்திய ஊடகங்களையும் தமிழக மக்களையும் பரபரப்பாகவே வைத்து கொண்டிருக்கிறார்.கருணாநிதி சந்திப்பு, ஆர். எம். வீரப்பனிடம் ஆசி பெற்றது என வேகமாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

முன்னதாக ரஜினியின் பாபா முத்திரையை அரசியல் கட்சிகள் உள்பட பலரும் விமர்சனம் செய்தனர். பாபா முத்திரையில் தாமரை மலர் இடம்பெற்றதால் ரஜினி, பாஜகவை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று கூறப்பட்டது. இதனையடுத்து பாபா முத்திரையின் கீழ் இருந்த தாமரை மலர் நீக்கப்பட்டு உண்மை உழைப்பு உயர்வு என்கிற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் ரசிகர்களையும் மக்களையும் ஒரு சேர இணைப்பதற்கான www.rajinimandram.org என்ற இணையதளத்தை தொடங்கி அதில் உறுப்பினர்களாக சேரும்படி மக்களுக்கும் ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்தார். தற்போது ரஜினி ரசிகர் மன்றம் என்பது ரஜினி மக்கள் மன்றமாக மாற்றம் செய்யப்படுள்ளது

click me!