முதலீடுகளை ஈர்க்கச்சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தால் ஒரு பயனும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம்
புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், கோடநாடு கொலைக்கு எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகி இருக்க வேண்டும். விஷ சாராயத்திற்கு செந்தில் பாலாஜி உள்ளிட்ட அனைவரும் பதவி விலகி இருக்க வேண்டும். அப்படியெல்லாம் இவர்களாக பதவி விலக இவர்கள் அந்த அளவுக்கு நேர்மையானவர்கள் இல்லை.
அதிமுக காலத்திலும் டாஸ்மாக் இருந்தது. விஷ சாராயம் விற்கப்பட்டது. ஆனால் அப்போது யாரும் இறக்கவில்லை. அதே சமயத்தில் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பாஜகவும், அதிமுகவும் ஆளுநரிடம் மனு கொடுக்கிறார்கள். எதற்காக ஆளுநரிடம் மனு கொடுக்க வேண்டும். அவரை நியமனம் செய்தது அந்த கட்சியின் தலைவரும், முதலமைச்சரும் தான். ஆளுநருக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார். செந்தில் பாலாஜியை நீக்க வேண்டுமா அல்லது தோற்கடிக்க வேண்டுமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்த போது விபத்து; சிறுவன் உள்பட 2 பேர் பலி
ஏற்கனவே முதல்வர் வெளிநாடு சென்றதால் என்ன நடந்து விட்டது. சிப்காட் என்கிறார்கள், சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிறார்கள். இதிலெல்லாம் யார் பணிபுரிகிறார்கள்? என்ன நடக்கிறது? இருந்தாலும் இலவச அரிசி தானே கொடுக்கிறீர்கள். குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் கொடுக்கிறீர்கள். இலவச பஸ் பாஸ் கொடுக்கிறீர்கள். இலவசம் தானே கொடுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய சீமான்
சிபிஎஸ்இ கல்விமுறையில் கப்பலோட்டிய தமிழன், வ. உ. சி, வீரன் அழகு முத்துக்கோன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், இவர்களை பற்றி பிள்ளைகள் தெரிந்து கொள்ள முடியுமா? நாட்டிலேயே தாய்மொழியில் மாணவர்கள் அதிகம் தோல்வி அடைந்தது தமிழகத்தில் தான்.
தமிழ் வாழ்க என்று மாநகராட்சி கட்டிடத்தில் மட்டும் எழுதி வைத்தால் தமிழ் வளர்ந்து விடுமா? தமிழ் வாழ்க வாழ்க என்று தமிழையே ஒழித்து கட்டி விட்டார்கள். தமிழைத் தேடி பரப்புரை பயணம் மேற்கொள்ளும் டாக்டர் ஐயாவின் பயணம் சிறக்க எனது பாராட்டுக்கள் என்றும்
சிங்கப்பூர் மலேசியாவில் கூட கடைத்தெருவில் தமிழில் பெயர் பலகைகள் இருக்கிறது. ஆனால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலும், சென்னையிலும் ஒரு கடைத்தெருவில் கூட தமிழில் பெயர் பலகைகள் இல்லை என்றார். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும்.
சேலத்தில் ஆம்புலன்ஸ் மோதி தூக்கி வீசப்பட்ட தாத்தா, பேரன்; சிசிடிவியில் பதிவான பரபரப்பு காட்சி
விஷ சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் வழங்குகிறார்கள். கடற்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட மீனவர்களுக்கு என்ன நிவாரணம் வழங்கினார்கள்? மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அதிகாரி படுகொலை செய்யப்பட்டார் அவர் குடும்பத்திற்கும் 10 லட்ச ரூபாய் கொடுக்கிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம் என்று கூறினார்.