கண்ணீர் விட்டு கதறி அழுத சீமான்..! மாவீரர் நாள் கூட்டத்தில் நெகிழ்ச்சி..!

By Manikandan S R SFirst Published Nov 28, 2019, 6:08 PM IST
Highlights

நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரையில் மாவீரர் தின பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாவீரர் தின சுடரை ஏற்றி வைத்தார். அப்போது சீமான் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

தனி தமிழீழ நாடு கேட்டு பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இலங்கை ராணுவத்துடன் போர் புரிந்து வந்தனர். இறுதியாக நடந்த நான்காம் கட்ட போரில் பல நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசு புலிகளை அழித்ததோடு மட்டுமின்றி லட்சக்கணக்கான தமிழர்களையும் கொன்று குவித்தது. இது தொடர்பாக உலகெங்கும் வாழும் மனிதநேய ஆர்வலர்கள் சர்வதேச சமூகத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விடுதலைப்புலிகள் உயிர்ப்போடு இருந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ம் தேதி போரில் உயிரிழந்த போராளிகளை நினைவு கூறும் 'மாவீரர் நாள்' கடைப்பிடக்கப்பட்டு வந்தது. இந்த நாளில் தான் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமீழழ மக்களுக்கு உரையாற்றுவார். இறுதியாக கடந்த 2008 ம் உரையாற்றியிருந்தார். இந்த வருடத்திற்கான மாவீரர் தினம் நேற்று உலகெங்கும் வாழும் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டது. ஈழத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்த இடங்களில் தமிழ் மக்கள் ஒன்று கூடி போரில் இறந்தவர்களை நினைவு கூர்ந்தனர்.

தமிழ் நாட்டிலும் பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் ஈழ உணர்வாளர்கள் சார்பாக மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி சார்பாக மதுரையில் மாவீரர் தின பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மாவீரர் தின சுடரை ஏற்றி வைத்தார். அப்போது சீமான் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது அங்கிருந்த அவரது கட்சியினரையும் கலங்கச் செய்தது. பின்னர் பேசிய அவர் மாவீரர்களின் தியாகம் வீண்போகாது என்றும், தனித்தமிழீழ நாடு கட்டாயம் அமையும் என்றும் பேசினார். ராஜீவ் காந்தியை குறித்து கூறிய கருத்துக்களை திரும்ப பெறப்போவதில்லை என்ற அவர், பழிக்குப்பழியாக அவர் கொலைசெய்யப்பட்டார் என்றார்.

click me!