திருமாவளவன் வீடியோ... வேலையை காட்ட ஆரம்பித்த திமுக... அலறும் மாரிதாஸ்..!

Published : Nov 28, 2019, 05:34 PM IST
திருமாவளவன் வீடியோ... வேலையை காட்ட ஆரம்பித்த திமுக...  அலறும் மாரிதாஸ்..!

சுருக்கம்

தனது வீடியோக்களை சன் டிவி காப்பிரைட்ஸ்  உரிமை கோரி சமூக வலைதளங்களில் இருந்து நீக்கி விட்டதாக மாரிதாஸ் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில் நான் திருமாவளவன் சார்ந்து வெளியிட்ட வீடியோவை என் முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது ஃபேஸ்புக் நிர்வாகம். காரணம் அதன் காப்பி ரைட்ஸ் வேறு ஒருவருடையது என்று.

ஆனால் நான் பொதுவாக எனது யூடியூப் சேனல் மற்றும் சமூகவலைதளப்பக்கங்களில் வேறு எவருடைய வீடியோ பதிவும் வெளியிடுவதில்லை. எங்களுடைய வீடியோவிற்கு காப்பி ரைட்ஸ் போலியாக உரிமை கொண்டாடியுள்ளனர் அந்த நிறுவனத்தினர். என் வீடியோவிற்கு எவருமே 1% கூட உரிமை கொண்டாட முடியாது, நான் வீடியோ எடுப்பது முதல் எடிட் செய்வதற்கு வரை அனைத்தையுமே என் அலுவலகத்தில் தான் செய்கிறேன். ஆக வாய்ப்பே இல்லாத நிலையில் என் வீடியோவை இன்னொரு நபர் உரிமை கொண்டாடியுள்ளார். இது சட்ட விரோதமான செயல்.

அது Aiplex என்ற நிறுவனம் antipiracy@aiplex.com என்ற மின்னசஞ்சல் முகவரி மூலம் உரிமை கொண்டாடியுள்ளது. இதை ஏன் மக்கள் முன் வைக்கிறேன் என்றால் சமீபத்தில் முகநூல் முழுவதும் சன் டிவி நிறுவனத்தைச் சார்ந்தோர் இதே நிறுவனத்தைக் கொண்டு, இதே antipiracy@aiplex.com ஈமெயில் வழியே காப்பி ரைட்ஸ் என்று கூறிகொண்டு பல வலதுசாரி மற்றும் பாஜக ஆதரவாளர்கள், திமுக எதிர்ப்பாளர்கள் பக்கங்களை முடக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் என் விடியோ நீக்கம் என்பது என் பக்கத்தை, சேனலை முடக்க எடுத்த நடவடிக்கையின் ஒரு பகுதியே ஆகும். சன் டிவி நிர்வாகம் இதனைச் செய்திருக்கும் என்றே நானும் கருதுகிறேன். சன் டிவி நிறுவனத்தை எதிர்த்து அனைவரும் ஒன்று திரள வேண்டிய நேரம் இது. போராட்டம் நடத்தவும் , பிரதமர் வரை விசயத்தைக் கொண்டு செல்லவும் , நீதிமன்றம் நாடவும், காவல்துறையில் புகார் அளிக்கவும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

திமுக ஆதரவாளர்கள் 2021 க்கான தேர்தல் வேலையை ஆரம்பித்துள்ளனர் என்றே கருதுகிறேன். முதலில் சமூக ஊடகத்தில் வலுவாக இயங்கும் அனைவரையும் முடக்குவது என்று திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறார்கள். இதை இந்த நிலையிலேயே எதிர்த்து நாம் நிற்கவில்லை என்றால் நிச்சயம் 2021 தேர்தலில் இவர்கள் சொல்வது தான் செய்தி , மக்கள் ஆட்டு மந்தையாக மீண்டும் ஆக்கிவிடுவர்.

பிரபல டீவி நிறுவனம் நடத்தும் விவாத மேடைகளை விட அதிகம் அளவிற்கு நமது வீடியோ மக்களை சென்று சேர்கிறது. இது தான் தற்போதைய உண்மை. இதனால் தான் எந்த போராட்டத்தையும் தூண்டிவிட்டு குளிர்காய முடியவில்லை திமுகவால். அனைவரும் திமுக, சண்டிவி கூடாரத்தை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?