மகனுக்கு காதுகுத்தும் போது கண்களை மூடிக்கொண்ட சீமான்..!

Published : Feb 16, 2021, 01:56 PM IST
மகனுக்கு காதுகுத்தும் போது கண்களை மூடிக்கொண்ட சீமான்..!

சுருக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மகனுக்கு, முடி இறக்கி, காதுகுத்தும் விசேஷத்தில், மகன் வலி தாங்க முடியாமல் அழுததை... விழி கொண்டு பார்க்க முடியாமல், கண்களை  மூடி கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.  

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மகனுக்கு, முடி இறக்கி, காதுகுத்தும் விசேஷத்தில், மகன் வலி தாங்க முடியாமல் அழுததை... விழி கொண்டு பார்க்க முடியாமல், கண்களை  மூடி கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் கடந்த 2013ம் ஆண்டு மிக பிரமாண்டமாக திருமணம் நடந்தது. தாய் மொழி தமிழுக்கும், தமிழரின் ஆதாரமாக விளங்கும் விவசாயத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சீமான், தன்னுடைய மனைவியின் கழுத்தில் கட்டிய தாலியில் கூட ’அ’ என்ற எழுத்து பொரித்து கட்டினார்.

திருமணமாகி 5 வருடங்களுக்கு பின்னர், கடந்த 2019 ஆம் ஆண்டு  சீமான் – கயல்விழி தம்பதிகளுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. சீமானுக்கு குழந்தை பிறந்த தகவலை அறிந்து... அன்றைய தினம் முழுவதுமே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

தன்னுடைய மகனுக்கும், மாவீரன் பிரபாகரன் என பெயர் சூட்டினார் சீமான். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே, முடிக்கரையில் அமைந்துள்ள தன்னுடைய குல தெய்வம் வீரமாகாளியம்மன் கோவிலில்... சுமார் 108 கிடா வெட்டி விருந்து படைத்தது மகனுக்கு முடி இறக்கி, காது குத்தும் விழாவை பிரமாண்டமாக நடத்தியுள்ளார்.

அப்போது, தன்னுடைய மகனுக்கு மாமன் மடியில் அமர வைத்து காது குத்தியபோது.... மகன் வலி தாங்க முடியாமல் அழுததை பார்க்க முடியாமல் கண்களை மூடி கொண்டார். ஒரு கட்சிக்கே தலைவர் என்றாலும் அப்பா என்கிற உணர்வு அவரை கண் மூடி கலங்க வைத்துவிட்டது. இதுகுறித்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!