இந்துக்கள் யார்? விவாதிக்க தயாரா? பொன்.ராதா, தமிழிசைக்கு சீமான் சவால்

Asianet News Tamil  
Published : Jan 18, 2018, 03:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
இந்துக்கள் யார்? விவாதிக்க தயாரா? பொன்.ராதா, தமிழிசைக்கு சீமான் சவால்

சுருக்கம்

seeman challenges pon radha and tamilisai

இந்துக்கள் யார் என்று தன்னுடன் விவாதிக்க மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனும் பாஜக மாநில தலைவர் தமிழிசையும் தயாரா என சீமான் சவால் விடுத்துள்ளார்.

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் கண்டனங்கள் தெரிவித்ததை அடுத்து, அதுதொடர்பாக வைரமுத்து வருத்தம் தெரிவித்தார். எனினும் ஸ்ரீவில்லுபுத்தூருக்கே வந்து மன்னிப்பு கோர வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஆண்டாள் குறித்து பேசிய வைரமுத்துவை இழிவான சொற்களால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்தார். தேசிய கட்சியின் தேசிய செயலாளராக இருந்துகொண்டு இழிவான சொற்களால் வைரமுத்துவை எச்.ராஜா விமர்சித்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும்போதிலும், இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் வைரமுத்துவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

எச்.ராஜாவையும் மிஞ்சிய பாஜக தமிழக துணை தலைவர் நயினார் நாகேந்திரன், ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்துவின் நாக்கை அறுத்து கொண்டுவருபவருக்கு பரிசுத்தொகை, இந்து தெய்வங்களை பற்றி அவதூறாக பேசுபவர்களை கொலை செய்ய வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அவரது பேச்சு பெரும் சர்ச்சையையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், வைரமுத்துவை வைத்து வம்படியாக அரசியல் செய்வது தவறானது. வைரமுத்து குறித்து எச்.ராஜா இழிவாக பேசியதும் தவறுதான். அவரும் மன்னிப்பு கோர வேண்டும். தமிழுக்கும் இலக்கியத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர் வைரமுத்து. அவர் தனி மனிதர் அல்ல. 

வைரமுத்து மீது வன்முறையை தூண்டும் வகையில் பேசுகிறார்கள். எங்கே அவர் பக்கத்தில் நெருங்கி பாருங்கள் என சீமான் சவால் விடுத்தார். மேலும் வைரமுத்துவின் பாடல் வரிகளால் புகழடைந்த ரஜினிகாந்த், வைரமுத்துவிற்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஆதரவு அளிக்கவில்லை. இதிலிருந்தே ரஜினியை பற்றி தெரிந்துகொள்ளலாம். இந்து.. இந்து.. என பேசும் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரரஜன் ஆகியோர் இந்துக்கள் யார் என்பது தொடர்பாக என்னுடன் விவாதிக்க தயாரா? என சீமான் சவால் விடுத்தார்.
 

PREV
click me!

Recommended Stories

தமிழக எம்.பி.களுக்கு செம டோஸ் விட்ட ராகுல் காந்தி..? டெல்லியில் நடந்தது என்ன..? செல்வப்பெருந்தகை ஓபன் டாக்
விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!