
சேலத்தில் நடைபெற்ற வீரப்பனின் 66-வது பிறந்தநாள் விழாவில் வீரப்பன் மனைவி முத்து லஷ்மி புதிய இயக்கத்தை தொடங்கினார். மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு என்ற புதிய இயக்கத்தை வீரப்பன் மனைவி முத்து லஷ்மி தொடங்கியுள்ளார்.
வீரப்பன் 18 ஜனவரி 1952 ம் ஆண்டு கோபிநத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தார்.வீரப்பனுக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.
சந்தன கடத்தல் வீரப்பன் என அழைக்கப்படும் இவர் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். ஆனால் பல வருடங்களாக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து வந்தார்.
தமிழகம் மற்றும் கர்நாடக காட்டுப் பகுதிகளில் பல காலம் தலைமறைவாக திரிந்து வந்த சந்தனக் கடத்தல் வீரப்பனும், மூன்று கூட்டாளிகளும், கடந்த 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி திங்கள் இரவு, தமிழக அதிரடிப் படையினரால் தர்மபுரி அருகே சுட்டுக் கொல்லப்பட்டதாகப் போலிசார் தெரிவித்தனர்.
வீரப்பன் நூற்றுக்கணக்கான விலங்குகளைக் கொன்றதாகக் கூறப்படும் நிலையிலும், பல கொலைகளைப் புரிந்ததாகக் கூறப்படும் நிலையிலும், வீரப்ப்பனின் மரணத்திற்குப் பின் சாமானிய மக்களில் பலர் அவரை ஒரு கதாநாயகன் போலவே எண்ணுகின்றனர் என்பது நிதர்சன உண்மை.
இந்நிலையில், இன்று வீரப்பனின் 66 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. சேலத்தில் நடைபெற்ற வீரப்பனின் 66-வது பிறந்தநாள் விழாவில் வீரப்பன் மனைவி முத்து லஷ்மி புதிய இயக்கத்தை தொடங்கினார். மண் காக்கும் வீரத்தமிழர் பேரமைப்பு என்ற புதிய இயக்கத்தை வீரப்பன் மனைவி முத்து லஷ்மி தொடங்கியுள்ளார்.