மக்களவை தேர்தல்... 40 தொகுதிகளிலும் சீமான் அதிரடி..!

Published : Jan 28, 2019, 04:52 PM ISTUpdated : Jan 28, 2019, 04:55 PM IST
மக்களவை தேர்தல்...   40 தொகுதிகளிலும் சீமான் அதிரடி..!

சுருக்கம்

தமிழகம், புதுச்சேரி அடங்கிய 40 மக்களவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

தமிழகம், புதுச்சேரி அடங்கிய 40 மக்களவை தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’வரும் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தலில் ஆண் வேட்பாளர்கள் 20 பேரும் பெண் வேட்பாளர்கள் 20 பேரும் சரிசமமாக நிறுத்தப்படுவார்கள்.

இதற்கான மாவட்டக் கட்டமைப்பு குழுவில் இரா.அன்புத்தென்னரசன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.இராவணன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.செகதீசன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் களஞ்சியம் சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் மு.இ.ஹுமாயூன் கபீர், மாநில ஒருங்கிணைப்பாளர் ரா.இரமேஷ்பாபு, மாநில மருத்துவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் ச.சுரேசுகுமார், மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இவர்கள் எழுவரும் நாம் தமிழர் கட்சியின் மாவட்டக் கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மாவட்டக் கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?
திமுகவை சரமாரியாக விமர்சித்த ராமதாஸ்.. NDA பக்கம் வண்டியை திருப்பும் ஐயா? ட்விஸ்ட்!