கர்நாடக சட்டமன்ற தேர்தல் இன்று வாக்கு பதிவு.! மீண்டும் ஆட்சியை பிடிப்பது யார்..? பாஜகவா.? காங்கிரஸா.?

By Ajmal Khan  |  First Published May 10, 2023, 6:31 AM IST

கர்நடாகவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கப்படவுள்ளது. இதனையடுத்து தேர்தல் பாதுகாப்பு பணியில் 1லட்சத்து 56 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 


கர்நாடக சட்டமன்ற தேர்தல்

தென் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகவாகும். இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிரமாக களப்பணியாற்றியது. இதே போல  கர்நாடகவில் தங்கள் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் அசூர வேகத்தில் தேர்தல் பணியாற்றியது. இந்தநிலையில் கர்நாடாகவில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற இரண்டு கட்சியின் தலை விதியை நிர்ணயிக்கும் வாக்குபதிவானது இன்று தொடங்குகிறது. கர்நாடகாவில் உள்ள 224 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான‌ தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 2 ,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது.

Tap to resize

Latest Videos

பதற்றமான வாக்குசாவடி- பாதுகாப்பு அதிகரிப்பு

வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 11 ஆயிரத்து 617 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன‌. காங்கிரஸ் மற்றும் பாஜகவின் வெற்றியை தீர்மானிக்கும் வகையில்  5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஏற்கனவே அரசு ஊழியர்கள் மற்றும் முதியோர்களுக்கு தபால் வாக்ககுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில்,  பணி நிமித்தமாக பல்வேறு மாவட்டங்களில் இருப்பவர்கள்  சொந்த ஊருக்கு சென்று வாக்களிப்பதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டுள்ளது.

1,50 போலீசார் பாதுகாப்பு

தேர்தல் நேரத்தில் எந்த வித வன்முறையும் ஏற்பட கூடாது என்பதற்காக வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரும், துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மொத்தமாக தேர்தல்பாதுகாப்பு பணியில் 1 லட்சத்து 56 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளன‌ர். மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டு இணையவழியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது.

இதையும் படியுங்கள்

கர்நாடகாவில் 4% முஸ்லிம் இடஒதுக்கீட்டை ரத்து; மறுஉத்தரவு வரும் வரை...உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!!

click me!