திமுகவுக்கு ரகசிய தூது... அதிமுக அமைச்சர்களால் அதிர்ச்சியில் எடப்பாடி..!

Published : Apr 15, 2021, 11:31 AM ISTUpdated : Apr 15, 2021, 04:16 PM IST
திமுகவுக்கு ரகசிய தூது... அதிமுக அமைச்சர்களால் அதிர்ச்சியில் எடப்பாடி..!

சுருக்கம்

சில அமைச்சர்களும் பல புள்ளிகளும் திமுக பக்கம் நேரடியாக தாவவும் தூது விடும் முயற்சியில் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த தேர்தலில் திமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என பலரும் கருதுகின்றனர். அடுத்து அதிமுகவின் நிலைத்தன்மை எப்படி இருக்கும் என்கிற சந்தேகமும் அதிமுகவில் உள்ள சிலரிடம் ஏற்பட்டுள்ளது.  இதனால் அதிமுக அமைச்சர்கள், முக்கியப்புள்ளிகள், விஐபிக்கள் சிலர் தங்கள் நிலைப்பாட்டை தற்போதே மாற்றிக்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. காரணம், அதிமுக அமைச்சர்கள் சிலர் தங்கள் மீதுள்ள வழக்குகளை, திமுக தூசு தட்டி எடுத்து விடக்கூடாது என்பதற்காக நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை சில அமைச்சர்களும் பல புள்ளிகளும் திமுக பக்கம் நேரடியாக தாவவும் தூது விடும் முயற்சியில் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. அதில் வெளிப்படையாகவே பலரது பெயர்களும் அடிபடுகிறது. திமுக வென்றால் அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும் என்கிற அச்சம் காரணமாகவும் அதிமுகவினர் திமுகவில் இணைய பேச்சுவார்த்தையை இப்போதே தொடங்கிவிட்டார்கள் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனாலும் தேர்தல் முடிவுகளை பொறுத்தே அணி மாறும் முடிவை எடுப்பார்களா? அல்லது கைவிடுவார்களா என்பது தெரிய வரும். 

PREV
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!