இந்துத்துவா என்பது இந்த நாட்டில் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியது.. வானதி சீனிவாசன் கருத்து.

By Ezhilarasan BabuFirst Published Apr 15, 2021, 10:52 AM IST
Highlights

பாஜக அரசு அனைவரின் முன்னேற்றத்திற்கான கட்சியாக மாறிக்கொண்டுள்ளது என கூறிய அவர், பட்டியல் இனத்தை சார்ந்த மக்களை காப்பாற்றும் வகையில் பாஜக செயல்படுகிறது எனவும், பட்டியல் இனத்தை சார்ந்தவர்களை அதிக அளவில் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்துத்துவா என்பது இந்த நாட்டில் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியது எனவும், இந்து தத்துவத்தைத் தான் அம்பேத்கர் முன் நிறுத்தினார் எனவும்  வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். டாக்டர் அம்பேத்கரின் 131 வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக மகளிரணி தலைவி வானதி ஸ்ரீனிவாசன் சென்னை மயிலாப்பூரில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்பேத்கர் எந்த சமுதாயத்தின் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று நினைத்தாரோ, எந்த சமுதாய மக்களுக்கு தொழில் உள்ளிட்ட வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி தர  நினைத்தாரோ, அந்த கனவை நிறைவேற்றுகின்ற வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்றார். 

பாஜக அரசு அனைவரின் முன்னேற்றத்திற்கான கட்சியாக மாறிக்கொண்டுள்ளது என கூறிய அவர், பட்டியல் இனத்தை சார்ந்த மக்களை காப்பாற்றும் வகையில் பாஜக செயல்படுகிறது எனவும், பட்டியல் இனத்தை சார்ந்தவர்களை அதிக அளவில் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் காளத்தில் கொரொனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் நேரத்தில் குறுகிய காலம் மட்டுமே இருந்ததால் அனைத்து மக்களையும் சந்திப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. போதுமான அளவில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பாக தான் பிரச்சாரம் மேற்கொண்டதாக தெரிவித்த அவர், அரசு கொடுக்கின்ற தடுப்பூசியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். மேலும், மக்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு தேவை என கூறினார். 

தொடர்ந்து பேசிய அவர், அம்பேத்கர் பேரில் நூலகம் உள்ளிட்டவைகளை அமைத்து செயல்படுத்தியது ஏபிவிபி  தான் என்றும், இந்துத்துவா என்பது இந்த நாட்டில் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியது என்றார். இந்து தத்துவத்தைத் தான் டாக்டர் அம்பேத்கர் முன் நிறுத்தினார். நாட்டில் ஜனாதிபதி முதல் பட்டியல் இணத்தை சார்ந்த அதிக எம்.பி.எம்.எல் ஏக்கள் பாஜகவில் தான் இருக்கின்றார்கள் என்று கூறினார். மேலும், அனைவருக்குமான தத்துவமாக அம்பேத்கர் மேற்கொண்டிருப்பது இந்துத்துவா தான் என்றார்.

 

டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவை நிறைவேற்ற கூடிய தலைவராக இருப்பவர்  பிரதமர் மோடி எனவும், மனு தர்மமோ மனு நீதியோ தீண்டாமையை வலியுறுத்துகின்றது என்றால் அதை எதிர்த்து  முதலாவதாக  குரல் கொடுப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் மற்றும் எங்களை போன்ற இயக்கங்களை சார்ந்தவர்கள் தான் என்றார். நாங்கள் ஆக்கப்பூர்வமாக தீண்டாமை கொடுமையை முறியடிப்பதற்காக பணி செய்து கொண்டிருக்கின்றோம், அரசியல் செய்வதற்காக அல்ல என்றார். மேலும், எது மனுதர்மம் எது மனுநீதி என்கின்ற தெளிவான கருத்து இல்லாத தங்கள் கற்பனைக்கு எட்டியதை பேசுகின்ற அரசியல் தலைவர்களிடம் நாங்கள் முரண்படுகின்றோம் என தெரிவித்தார்.
 

click me!