சசிகலா விடுதலையில் ரகசிய தகவல்... அமாவாசையன்று சந்திக்கும் கவர்னர்... வரவேற்க தயாராகும் 10 அமைச்சர்கள்..!

By Thiraviaraj RMFirst Published Jan 9, 2021, 11:29 AM IST
Highlights

கர்நாடக பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வருகிற ஜனவரி 27 அன்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா விடுதலையாகி வருகிறார். இப்படித்தான் ஊடகங்களில் பல்வேறு வடிவங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
 

கர்நாடக பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வருகிற ஜனவரி 27 அன்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா விடுதலையாகி வருகிறார். இப்படித்தான் ஊடகங்களில் பல்வேறு வடிவங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதி மன்றத்தால் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  அவர்களின் தண்டனை காலம் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது.

 

ஆனால், உண்மை அதுவல்ல. ஜனவரி 26 அமாவாசை அன்றே சசிகலாவை விடுதலை செய்யப்பட்டு கர்நாடகாவில் உள்ள முக்கிய அரசு தங்கும் விடுதியில் அவர் தங்க வைக்கப்படுகிறார். அதே இடத்தில் ஒரு மாநிலத்தின் கவர்னரும் சசிகலாவைச் சந்திக்க இருக்கிறார். அந்தச் சந்திப்பில் பல முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிய வருகிறது.

அங்கு சுமார் 20 நபர்களுக்கு மட்டும், அதாவது, அவரைப் பார்ப்பதற்கும், பேசுவதற்கும் அவருடனேயே தங்குவதற்கும் முக்கிய குடும்ப உறுப்பினர் மற்றும் நலம்விரும்பிகளுக்கும் அறைகள் ஒதுக்கப்பட்டு விட்டது என்ற நம்பகமான தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்துதான் டி.டி.வி.தினகரன் கடந்த 3 நாட்களுக்கு முன்பே ரகசியமாக டெல்லிக்குப் போயிருப்பதாக உறுதியான தகவல்கள் சொல்கின்றன.

இந்நிலையில், விடுதலையாகி வெளி வரப்போகும் சசிகலாவைச் சந்திக்க 18க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தயாராகி விட்டதாக மத்திய உளவுத்துறை வட்டாரத்திற்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதில் அமைச்சர்கள் செல்லூர்ராஜூ, ஓ.எஸ்.மணியன், உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திரபாலாஜி, சி.வி சண்முகம், பாஸ்கரன் அம்பலம், திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், காமராஜ், வெல்லமண்டி நடராஜன், உட்பட 18க்கும் அதிகமானோர் பெயர்கள் இருப்பதாகவும் பட்டியலை தயார் செய்திருக்கிறது மத்திய உளவுத்துறை.

ஆனால் இவர்கள் எல்லாம் உடனடியாக சசிகலாவைச்சந்திக்க முடியாதவாறு சில தடுப்புகளும், கடுப்புகளும் தயாராகிக் கொண்டிருக்கிறதாம். இவர்கள் பாடே திண்டாட்டமாய் இருக்கும்போது அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போன்றவர்களின் நிலைமை தடுமாற்றமாய் இருப்பதாகவும் பரபரப்பாக டெல்லி வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. எதனைத் திண்றால் பித்தம் தெளியும் என்ற கதைதான் என்கிறார்கள்.

மேலும் சசிகலாவை மிகவும் அதிகமாக விமர்சித்த கே.சி.வீரமணிக்கு அனுமதியே கிடைக்கப்போவதில்லை என்ற தகவலும் வராமல் இல்லை. மீறி வந்தாலும் அவர் காக்க வைக்கப்படுவார் என்றும் பேச்சு எழுந்துள்ளது. எனவே பல துறைகளின் அமைச்சர்கள் சாஷ்டாங்கமாக சசிகலாவின் காலில் விழ முடிவு செய்து விட்டதாகவும் தகவல். 

click me!