முதல்ல நல்ல மனுசனா மாறுங்க... ரஜினியை சீண்டும் சீமான்..!

By Thiraviaraj RMFirst Published Aug 12, 2019, 11:03 AM IST
Highlights

ரஜினியை குறிவைத்து தாக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ள நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், மோடி, அமித்ஷாவை பாராட்டியதற்காக ரஜினியை மீண்டும் சீண்டி இருக்கிறார். 

ரஜினியை குறிவைத்து தாக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ள நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், மோடி, அமித்ஷாவை பாராட்டியதற்காக ரஜினியை மீண்டும் சீண்டி இருக்கிறார். 
   
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அங்கு கல்வி, வேலை வாய்ப்பு இல்லை, உட்கட்டமைப்பு வசதியில்லை. அங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக கூறுகிறார்கள். 433 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை இரண்டாக ஏன் பிரிக்கவில்லை?

மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என கூறுகிறது. அப்படியென்றால் முத்தலாக் சட்டத்தை ஏன் நிறைவேற்றினார்கள்? அதிகாரம் படைத்தவர்கள் சொல்லும் போது, அடிமைகள் கை கட்டி கேட்ட வேண்டிய நிலையில் இருக்கிறோம். பாஜக தலைவர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் கிருஷ்ணர், அர்ஜூனன் போன்றவர்கள் என்று ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இது அவருடைய சொந்த கருத்து. முதலில் அவர் நல்ல மனிதராகவும், நல்ல தலைவராகவும் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க:-  இப்படி ஒரு மோசமான வெற்றியை எதிர்பார்க்கவில்லை... வெளிப்படையாக ஒப்புக் கொண்ட துரைமுருகன்..!

தமிழ்நாட்டின் கனிம வளங்களை மத்திய அரசு கொள்ளையடிக்க வேண்டும் என நினைக்கிறது. ஹைட்ரோகார்பன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டங்களை அமல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது. அதற்கு தமிழக அரசும் ஆதரவாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி அறிவித்தால் உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் போட்டியிடுவோம். மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு செயல்படுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இந்த அரசு திறக்கும். அதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

கர்நாடக மாநிலத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கப்போவதாக தகவல் வெளியானது. அதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. அங்கு அணுக்கழிவு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். தற்போது கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்காக முயற்சி நடந்து வருகிறது. இதை எதிர்த்து போராட்டம் நடத்தினால் கைது செய்கிறார்கள். இந்த அரசு சர்வாதிகாரி போல் செயல்படுகிறது’’ என அவர் கூறினார்.

click me!