வாக்கு பெட்டிகள் பாதுகாக்கும் மையத்தில் உள்ள அறைகளுக்கு சீல்... மூன்றடுக்கு பாதுகாப்பில் வாக்கு பெட்டிகள்..

By Ezhilarasan BabuFirst Published Apr 7, 2021, 3:14 PM IST
Highlights

அண்ணா பல்கலைகழகத்தில் அமைந்துள்ள வாக்கு பெட்டிகள் பாதுகாக்கும் மையத்தில் உள்ள அறைகளுக்கு சீல் வைக்கும் பணி முடிவடைந்துள்ளது. நேற்று நிறைவு பெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.  

அண்ணா பல்கலைகழகத்தில் அமைந்துள்ள வாக்கு பெட்டிகள் பாதுகாக்கும் மையத்தில் உள்ள அறைகளுக்கு சீல் வைக்கும் பணி முடிவடைந்துள்ளது. நேற்று நிறைவு பெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் தமிழகம் முழுவதும் 75 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் குயின் மெரிஸ், லயோலா கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைகழகத்தில்  ஆகிய 3 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இதை தொடர்ந்து  கிண்டியில்  அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மைலாப்பூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, விருகம்பாக்கம், தியாகராயநகர் தொகுதிகளின் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. தாசில்தார், துணை வட்டாட்சியர், தேர்தல் நடத்தும் ஆணையர், உதவி துணை வட்டாட்சியர் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்,தெற்கு மண்டல கூடுதல் வருவாய் அலுவலர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள இருப்பு அறைகளை சுற்றி மொத்தம் 72 கண்காணிப்பு காமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு அறையின் வெளியில் தோராயமாக 2 முதல் 3 காமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

வாக்குபதிவின் போது பழுதடைந்த இயந்திரங்கள் நந்தனத்தில் உள்ள அரசு கலை கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. நுழைவாயிலில் மாநில காவல்துறை வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறையை சுற்றி 50மீட்டர் தொலைவில் ஆயுத படை காவலர்கள் பாதுகாப்பில் ஈடுப்பட்டுள்ளனர். அதேபோல பாதுகாப்பு அறையை சுற்றி துணை ராணுவபடையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். துணை ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மாநில காவலர்கள் செல்ல கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

click me!