நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு... முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Oct 21, 2020, 11:53 AM IST
Highlights

ஆந்திராவில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 2ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி, பாடம் கற்பிக்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் 2ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி, பாடம் கற்பிக்கப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜுன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம்  முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது. எனினும், இவ்விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.  இதனால், பல்வேறு மாநிலங்களும் பள்ளிகள் திறப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளி முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, அவர் கூறுகையில்;- 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்த மாதம் 2ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். இதில் 1, 3, 5, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாளும், 2, 4, 6, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றொரு நாள் என்று 2 நாட்களுக்கு ஒருமுறை பள்ளிகளில் பாடம் கற்பிக்கப்படும். மாணவர்களின் எண்ணிக்கை 750க்கு மேல் இருந்தால் 3 நாட்களுக்கு ஒருமுறை வகுப்புகள் நடத்த வேண்டும். 

பள்ளிகள் மதியம் வரை மட்டுமே திறந்திருக்கும். மதிய உணவிற்கு பின் மாணவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். இந்த நடைமுறை அடுத்த மாதம் செயல்படுத்தப்படும். பின்னர், டிசம்பர் மாத்தில் சூழ்நிலைக்கு ஏற்றார் போல பள்ளிகள் செயல்படுவது அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். 

click me!