பள்ளிகள் திறக்க நீண்டகாலம் ஆகும்.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 1, 2020, 7:35 PM IST
Highlights

கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்க நீண்ட நாட்கள் ஆகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 

கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்க நீண்ட நாட்கள் ஆகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அப்போது ஓரிரு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஆங்காங்கே ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. சில பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோரை நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. 

அதுபோல் பள்ளிகள் திறக்காவிட்டாலும் ஆன்லைன் வகுப்புகளை காரணம் காட்டி கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக வழக்கு ஒரு பக்கம் நடந்து வருகிறது. மேலும், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். தற்போது 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;- 12ம் வகுப்பு தேர்வை 35,000 மாணவர்கள் எழுதவில்லை. ஆனால், தேர்வு எழுத இதுவரை 718 பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர். விருப்பம் தெரிவித்தவர்களுக்கு தேர்வு வைத்த பின்னரே முடிவு வெளியிடப்படும். மீண்டும் பேருந்து இயங்கினால் மட்டுமே தேர்வு நடத்த முடியும்.

மேலும், முதல்வருடன் ஆலோசித்த பிறகே 12ம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து அறிவிக்கப்படும் என்றார்.  கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவி வருவதால் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்க நீண்ட நாட்கள் ஆகும். மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பெற்றோர்களிடம் கருத்துக் கேட்ட பின்பே பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

click me!