வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் செயல்படும்.. மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அரசு அதிரடி.

By Ezhilarasan BabuFirst Published Jan 14, 2021, 12:09 PM IST
Highlights

பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம்  ஒப்புதல்கடிதம் பெற்று வரவேண்டும்,  தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அரசிடன் உரிய அனுமதி பெற வேண்டும். வகுப்பறைக்கு உள்ளே வெளியே முகக் கவசம் அணிவது கட்டாயம்.
 

வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அரசு இவ்வாறு கூறியுள்ளாது. கொரோனா நோய் தொற்றின் தாக்கம் தற்போது சற்று குறைந்திருக்கும் சூழ்நிலையில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் பள்ளிகளை திறக்கலாமா என்பது குறித்து பெற்றோரிடம் மீண்டும் கருத்து கேட்கப்பட்டது. 

அந்தக் கருத்துக்களின் அடிப்படையில் வருகிற 19ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு  நெறிமுறையில் கூறியுள்ளதாவது:-  பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம்  ஒப்புதல்கடிதம் பெற்று வரவேண்டும்,  தனியார் பள்ளிகள் திறப்பதற்கு முன் அரசிடன் உரிய அனுமதி பெற வேண்டும். வகுப்பறைக்கு உள்ளே வெளியே முகக் கவசம் அணிவது கட்டாயம். 

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும், ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம், இல்லையெனில் பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம். மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!