உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக துடைப்பம் ஏந்திய அதிமுக மகளீர் அணி.. தகுந்த பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை.

Published : Jan 14, 2021, 11:48 AM IST
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக துடைப்பம் ஏந்திய அதிமுக மகளீர் அணி.. தகுந்த பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை.

சுருக்கம்

எனவே அதிமுக-திமுக இரண்டு கட்சிகளுமே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி ஒருவரை மாற்று ஒருவர் தாக்கியும் விமர்சித்து வருகின்றன. இதனால் அரசியில்க்களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. 

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து அதிமுக மகளிரணி சார்பில் துடைப்பம் ஏந்தி போராட்டம் நடைபெற்றது. வரும் சட்டமன்ற தேர்தல் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசியில் கட்சிகற் அதை எதிர் கொள்ள தயாராகி வருகின்றன. யாருடன் கூட்டணி அமைப்பது என்ற வியூகங்களிலும் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ரஜினி ஆரசியல் வருகையில் இருந்து பின்வாங்கியுள்ளதால். வழக்கம் போல இந்த தேர்தலிலும் அதிமுக- திமுகவுக்கும் இடையே நேரெதிர் போட்டி நிலவும் சூழல் உள்ளது. 

எனவே அதிமுக-திமுக இரண்டு கட்சிகளுமே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி ஒருவரை மாற்று ஒருவர் தாக்கியும் விமர்சித்து வருகின்றன. இதனால் அரசியில்க்களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில்  சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை மிகக்கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலாவை இணைத்து ஆபாசமாக பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

இதனைக்கண்டித்து அதிமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் அதிமுக மகளிரணி சமூக வள்ளி தலைமையில் சார்பில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை கண்டித்து துடைப்பங்களோடு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன். வரும் சட்டமன்ற தேர்தலில் பெண்கள் திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் எனவும் எச்சரித்தனர். 
 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!