பள்ளிகள், கல்லூரிகள் இப்போதைக்கு திறக்கப்பட மாட்டாது.. அமைச்சர் அதிரடி முடிவு.

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2021, 1:41 PM IST
Highlights

பள்ளி கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 18 வயதிற்கு மேல் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். 

பள்ளி. கல்லூரிகள் தற்போது திறக்கப்படமாட்டாது என புதுச்சேரி மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை கட்டுக்குள் வரத்தொடங்கிய நிலையில் கடந்த ஒருவார காலமாக மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. இதனால் பல இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 

புதுச்சேரியில் பள்ளி மற்றும் கல்லூரி திறப்பது குறித்து கல்வித்துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று அமைச்சர் தலைமையில் விரிவான ஆலோசனை நடைபெற்றது, பின்னர் இது குறித்து தெரிவித்த அமைச்சர், புதுச்சேரியில் மூன்றாவது அலை எப்போது வரும் என்று தெரியாது. இன்று 3 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏர்ப்பட்டுள்ளதாக சுகாதார துறை இயக்குனர் கூறி உள்ளார், பள்ளி கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 18 வயதிற்கு மேல் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். 

அதற்கேற்ப வருகின்ற 11,12,13 ஆகிய தேதிகளில் கல்லூரிகளில் இந்த சிறப்பு முகாம் நடத்த ஆளுநர் மற்றும் முதல்வர் உடன் ஆலோசித்த பிறகு உறுதி செய்யப்படும். கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி போட்ட பிறகே கல்லூரிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். அக்டோபர் 15 தேதிக்கு மேல் மூன்றாவது அலை எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்து பள்ளி திறப்பது குறித்து ஆளுநர் மற்றும் முதல்வருடன் ஆலோசனை செய்து அதற்கு பிறகு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 
 

click me!