சட்டப்பேரவையில் மட்டுமல்ல கருணாநிதியின் படம் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டும்.. சு.ப வீரபாண்டியன்.

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2021, 1:17 PM IST
Highlights

தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்ய ஒரு போராட்டம் நடத்த வேண்டியிருந்தது என்பதே ஒரு விந்தையான செய்தி, ஒரு கட்டத்தில் இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் இன்று பலகைகள் இருந்தன. இப்போது தமிழில் தான் அர்ச்சனை செய்யப்படும், தேவையானால் வேற்று மொழியில் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிற ஒரு அரசு நமக்கு கிடைத்திருக்கிறது. 

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை குடியரசு தலைவர் திறந்து வைப்பது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் திருவுருவப்படம் திறப்பு விழா கோடம்பாக்கத்தில் உள்ள திராவிடர் இயக்க தமிழர் பேரவை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுப.வீரபாண்டியன் தலைமையில் திராவிடர் இயக்க தமிழர் பேரவை அவைத்தலைவர் கயல் தினகரன் படத்தைத் திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், 

தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி இன்றைய தினம் சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் படம் திறக்கப்பட உள்ளது. கணக்கு தெரியாத பலர் இதை எப்படி நூற்றாண்டு என்று கேட்கிறார்கள். பேரவைத் தேர்தல் 1920 ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட்டது. 1921 ஜனவரி 12ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் முதன்முதலாக தொடக்கி வைக்கப்பட்டது. 1971 நீதிக்கட்சியின் ஆட்சியில் தமிழ்நாடு சட்டமன்றம் இயங்கத் தொடங்கியது. 

2021-ல் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார் இந்த நூற்றாண்டு விழாவும் நூற்றாண்டு விழாவையொட்டி குடியரசு தலைவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் படத்தை திறந்து வைப்பதும் வரலாற்று சிறப்புமிக்க  நிகழ்ச்சி, எனவே இந்த நாள் வரலாற்றில் குறிக்கப்பட்ட வேண்டிய நாளாக அமையும். சட்டமன்றத்தில் மட்டும் கலைஞரின் படம் இருந்தால் மட்டும் போதாது ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் அலுவலகத்திலும் அவரது படம் இருக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்து இருந்தேன். அதை நாம் முதலில் செய்ய வேண்டும் என்ற நோக்கில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் இன்று திறக்கப்பட்டது என்றார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் மிக சரியான ஒரு அறிவிப்பை கொடுத்திருக்கிறார். பல கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் வருகின்ற புதன், வியாழன் கிழமைகளில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர்  கோவிலில் இருந்து தமிழ் அர்ச்சனை தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார். 

தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்ய ஒரு போராட்டம் நடத்த வேண்டியிருந்தது என்பதே ஒரு விந்தையான செய்தி, ஒரு கட்டத்தில் இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் இன்று பலகைகள் இருந்தன. இப்போது தமிழில் தான் அர்ச்சனை செய்யப்படும், தேவையானால் வேற்று மொழியில் கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிற ஒரு அரசு நமக்கு கிடைத்திருக்கிறது. தமிழில் அர்ச்சனை என்பது எல்லா இடங்களிலும் ஒலிக்கவேண்டும் கோரிக்கைக்கான புது வாய்ப்பாக அமைகிறது. வழிபாட்டு மொழியாகவும் தமிழ் வருவதில் மகிழ்ந்து வரவேற்கிறோம் என அவர் கூறினார். மேலும் மேகதாது அணை விவகாரத்தில் பாஜகவின் இரட்டை நிலைபாடு புதியதாக என்ன எப்போதும் அவர்களுக்கு உரியது தான். நீட் தேர்வை சட்டமன்றத்தில் எதிர்ப்போம் என்றும் வெளியில் ஆதரிப்போம் என்று பேசுகிறவர்கள். மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழக மக்களும் உறுதியாக உள்ளனர். மேகதாது அணை கட்டப்பட்டால் பல சிக்கல்களை உருவாக்கும் என்று சுப. வீரபாண்டியன் தெரிவித்தார்.
 

click me!