ஆயிரம்தான் இருந்தாலும் அதிமுக செய்வது மிகப்பெரிய தவறு.. அழகிரி ஆதங்கம்.

By Ezhilarasan BabuFirst Published Aug 2, 2021, 1:02 PM IST
Highlights

பிரதமர் நரேந்திர மோடியை சேரும் என்று அந்த கட்சியை சேர்ந்தவர்கள் சொல்வது ஏற்றதக்கது அல்ல. அப்போது, பிரதமராக நேரு இருந்த போது இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் கொண்டு வந்தார். 

சட்டமன்றத்தில் நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு விழாவை அதிமுக புறக்கணிப்பது தவறு என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். விடுதலை போராட்ட தியாகி வழக்கறிஞர் சுப்பிரமணிய சாஸ்திரியார் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக 1921 இல் பதவியேற்று 100 ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை, சத்தியமூர்த்தி பவனில்  அவரது திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இந்நிகழ்வில், சுப்பிரமணிய சாஸ்திரியார் பேத்தி சுசீலா ஜெயச்சந்திரன், துணைத் தலைவர்கள் கோபண்ணா, ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  மாநில தலைவர் கே.எஸ். அழகிரி:- இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கியது பாஜக தான் என்றும் அந்த பெருமை பிரதமர் நரேந்திர மோடியை சேரும் என்று அந்த கட்சியை சேர்ந்தவர்கள் சொல்வது ஏற்றதக்கது அல்ல. அப்போது, பிரதமராக நேரு இருந்த போது இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் கொண்டு வந்தார். அந்த பெருமை காங்கிரஸ் தலைவர்களுக்கும், காங்கிரஸ் இயக்கத்திற்கும் உண்டு. ‌இதர பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வந்தது. அதனை காலம் தாழ்ந்து பாஜக தற்போது நிறைவேற்றி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிப்பதை தவிர பாராட்ட முடியாது.

இன்று சட்டமன்றத்தில் நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் திறப்பு விழாவை அதிமுக புறக்கணிப்பது தவறு. கருணாநிதியை பொறுத்தவரை தமிழகத்தின் நீண்ட கால முதல்வர் மட்டும் அல்ல‌. உழைப்பால் உயர்ந்த தலைவர்.இந்த படம் திறப்பு விழாவை ஜெயலலிதா படம் திறப்பு வாழாவோடு ஒப்பிட கூடாது. அன்று நாங்களும் திமுகவும் புறக்கணித்தற்கு காரணம் சட்ட சிக்கல் இருந்தால்தான், ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தண்டிக்தப்பட்டவர். அதனால் நாங்கள் பங்கேற்கவில்லை, இதையும்கூட சொல்வதற்கு எனக்கு விருப்பமில்லை. விவாதற்கு வந்துவிட்டதால் தான் சொல்கிறேன் என்றும் தெரிவித்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றம் என்பது அத்தைக்கு மீசை முளைத்த பிறகு பார்த்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

click me!