செப்டம்பரில் பள்ளி- கல்லூரிகள் திறப்பு..? அரசு போட்டு வைத்துள்ள அதிரடி ப்ளான்..!

By Thiraviaraj RMFirst Published Aug 11, 2020, 10:34 AM IST
Highlights

கொரொனா தொற்று குறைந்தால் செப்டம்பர் மாதம் பள்ளி- கல்லூரிகளை திறக்க பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன. 
 

கொரொனா தொற்று குறைந்தால் செப்டம்பர் மாதம் பள்ளி- கல்லூரிகளை திறக்க பல்வேறு மாநில அரசுகள் திட்டமிட்டு வருகின்றன. 

ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அடுத்தடுத்து மத்திய அரசு ஊரடங்கு என்ற பெயரில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தபோதும் கூட, பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனிடையே, கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்தே பள்ளி-  கல்லூரிகள் திறக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்து இருந்தார்.

இதனையடுத்து அசாம், ஆந்திரா மாநிலம், மேற்குவங்கம், கோவா ஆகிய மாநிலங்களில் செப்டம்பர் மாதம் பள்ளிக் கல்லூரிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அசாம் கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இதுகுறித்து பேசிய போது “பள்ளிகளை திறப்பது குறித்து முதற்கட்ட திட்டங்களை வகுத்துள்ளோம். ஆனாலும் அது குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தி வருகிறோம். மத்திய அரசின் வழிகாட்டுதல் படி, நாங்கள் அந்த திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவோம்”என்று கூறியுள்ளார்.

 

 ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு, செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை திறக்க தயார் நிலையில் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்குவங்கத்திலும் செப்டம்பர் 5 முதல் பள்ளி கல்லூரிகளை திறக்க மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்தால், நிச்சயம் செப்டம்பரில் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே தமிழகத்தை பொறுத்தவரை, தற்போது உள்ள சூழ்நிலைக்கு பள்ளி, கல்லூரிகளை திறக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். கொரோனா தொற்றானது படிப்படியாக குறைந்ததும் மக்களின் கருத்துகளுக்கேற்ப சூழ்நிலையை பொறுத்து பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

click me!