ஒரே ஒரு ட்வீட்... நாடு முழுவதும் சலசலப்பு.. இது கனிமொழி ஸ்டைல் அரசியல்.. ஆடிப்போன திமுக மேலிடம்..!

By Selva KathirFirst Published Aug 11, 2020, 10:32 AM IST
Highlights

தனியாக தேர்தல் வியூக வகுப்பாளர், பிரத்யேகமாக ஐடி டீம் எல்லாம் வைத்தும் கூட பெரிய அளவில் திமுக தலைமையால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத சூழலில் ஒரே ஒரு ட்வீட் போட்டு நாடு முழுவதையும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் கனிமொழி.

தனியாக தேர்தல் வியூக வகுப்பாளர், பிரத்யேகமாக ஐடி டீம் எல்லாம் வைத்தும் கூட பெரிய அளவில் திமுக தலைமையால் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாத சூழலில் ஒரே ஒரு ட்வீட் போட்டு நாடு முழுவதையும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார் கனிமொழி.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய கனிமொழியிடம் விமான நிலையத்தில் வழக்கமான பரிசோதனைகள் நடைபெற்றுள்ளளன. அப்போது கனிமொழியை சோதனை செய்த அதிகாரி இந்தியில் ஏதோ கேட்டுள்ளார். அதற்கு தனக்கு இந்தி தெரியாது, தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கனிமொழி கூறியுள்ளார். ஆனால் இந்தி தெரியாது என்றால் நீங்கள் எப்படி இந்தியன்? என்கிற ரீதியில் அந்த பெண் அதிகாரி கேள்வி எழுப்பியதாக கனிமொழி தெரிவித்துள்ளார். அதாவது இந்தியாவில் இந்தி பேசினால் தான் இந்தியனா? விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருக்கும் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் இப்படித்தான் கேள்வி கேட்பார்களா? என்று ஒரே ஒரு ட்வீட்போட்டார் கனிமொழி.

கனிமொழி இப்படி ஒரு ட்வீட் போட்டதும் அதற்கு கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்தார். இந்தி என்ன இந்தியர்களின் பொது மொழியா என்கிற ரீதியில் அவர் ட்வீட் போட பிரச்சனை பெரிதானது. மேற்கு வங்கத்தை சேர்ந்த எம்பி மஹூவா மொய்த்ராவும் கனிமொழிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதே போல் தமிழகம் கடந்து இந்தி பேசாத மற்ற மாநிலங்களில்வ இருந்தும் கனிமொழிக்கு ஏற்பட்ட நிலைக்கு எதிராக பலரும் கொந்தளித்தனர்.

பொதுவாக திமுக தலைவர்களிடம் இருந்து ஒதுங்கியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூட கனிமொழிக்கு ஆதரவாக ட்வீட் செய்தது தான் இதில் புதிய திருப்பம். கனிமொழி இப்படி ஒரு பிரச்சனையை எழுப்பி அது தேசிய ஊடகங்களில் விவாதப் பொருள் ஆனது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கனிமொழி கூறிய குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ், பாஜகவிடம் இருந்து பதில் பெற்று ஒளிபரப்பியது. அதாவது கனிமொழி ஒரே நாளில் தேசிய அளவில் விவாதப் பொருள் ஆகிவிட்டார். மேலும் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்க தொடர்ந்து முயற்சி நடைபெறுகிறது என்கிற பிரச்சாரம் வலுப்பெற்றது.

மேலும் பெங்களூர் விமான நிலையத்தில், இந்தி பேசினால் தான் இந்தியரா? என்று ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இப்படி இந்தி எதிர்ப்பு தமிழகம் கடந்து பிற மாநிலங்களிலும் எதிரொலிக்க கனிமொழி காரணமாகிவிட்டார். விஷயம் விஸ்வரூபம் எடுத்த பிறகு திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கனிமொழிக்கு ஆதரவாக ட்வீட் செய்தனர். அதாவது திமுக எம்பி கனிமொழிக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து ஆதரவு வந்த பல மணி நேரங்கள் கழித்து தான் திமுகவிடம் இருந்தே வந்துள்ளது.

இது கனிமொழிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஏற்பட்ட கலக்கத்தின் வெளிப்பாடு என்கிறார்கள். அதாவது பிரசாந்த் கிஷோரை தேர்தல் வியூக வகுப்பாளராக வைத்துள்ளோம், தனியாக ஐடி விங்க் வைத்திருக்கிறோம் ஆனால் நாம் சமூக வலைதளங்களில் என்ன செய்தாலும் அதற்கு எதிராக ஏதோ ஒன்று பூமராங் ஆகிறது. ஆனால் ஒரே ஒரு ட்வீட்டில் கனிமொழி இந்திய அளவில் ஒரு சலசலப்பை ஏற்படுத்திவிட்டாரே என்று திமுக தலைமை ஆடிப்போய்விட்டதாகவே கருதப்படுகிறது.

இதற்கிடையே கனிமொழியிடம் நீங்கள் இந்தியரா என்று கேட்ட சிஐஎஸ்எப் அதிகாரியை கண்டுபிடிக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

click me!