2021ல் தான் பள்ளி, கல்லூரிகள் திறப்பு... அதிர்ச்சி தகவல் கொடுத்த மத்திய அரசு..!

By vinoth kumarFirst Published Aug 11, 2020, 12:37 PM IST
Highlights

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு டிசம்பர் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். 


கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு டிசம்பர் வரை பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். 

ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அடுத்தடுத்து மத்திய அரசு ஊரடங்கு என்ற பெயரில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தபோதும் கூட, பள்ளிக் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனிடையே, கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்தே பள்ளி-  கல்லூரிகள் திறக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், மத்திய கல்வித்துறை செயலாளர் அமித் கரே கலந்துகொண்டார். அப்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டால் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால், டிசம்பர் மாதம் வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே தகவல் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

click me!