சற்று முன்... பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை..!! சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு...!!

By Asianet TamilFirst Published Sep 19, 2019, 8:51 AM IST
Highlights

 வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்  கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

மழை பெய்தாலும் தேர்வு நடப்பதின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை, வழக்கம் போல செயல்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை கொட்டித்தீர்க்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நேற்று இரவு முதல் சென்னையில் பலபகுதிகளில் கனத்த மழை பொழிந்து வருகிறது.  சென்னையில் மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறு, கிண்டி, கோட்டூர் புரம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.  இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடியவிடி இடி, மின்னலுடன் கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்பேல தேங்கிஉள்ளது, சாலைகளில் வெள்ளம் ஆறாக ஒடுகிறது, மழை விட்டாலும் தொடர்ந்து தூரல் இருந்து வருவதால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்று மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்த நிலையில், சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார். தேர்வு நடைபெறுவதால் சென்னையில் உள்ள பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என  ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

குறிப்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம், செவிலிமேடு வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தமிழக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த சுழற்சி காரணமாக வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்  கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார். சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கன மழையின் அளவு  6 சென்டி மீட்டர் முதல் 9 சென்டி மீட்டர் வரை பதிவாகி உள்ளது
 

click me!