மூணே வருஷம்தான் !! 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு அரசு வேலை !! அசத்திய பினராயி விஜயன் !!

Published : Sep 19, 2019, 08:43 AM IST
மூணே வருஷம்தான் !! 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு அரசு வேலை !! அசத்திய பினராயி விஜயன் !!

சுருக்கம்

கேரள மாநிலத்தில் அரசுப் பணியாளர் நியமனத்துக்கு முந்தைய காங்கிரஸ் அரசு விதித்திருந்த தடையை விலக்கியதுடன் 3 ஆண்டுகளில் ஒருலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும், 22,500 புதிய பணியிடங்களையும் தோற்றுவித்துள்ளதாகவும் மம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் மேலக்காவு என்ற இடத்தில் நடைபெற்ற இடைத் தேர்தல் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்றுப் பேசினார். அப்போது தற்போதுள்ள கேரள மாநிலம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருத்தது அல்ல.

கேட்பாரற்ற வகையில் ஊழல் முறைகேடுகள் நடந்த ஆட்சியிலிருந்து முறைகேடுகள் கடுமையாக ஒடுக்கப்பட்ட மாநிலமாக கேரளம் மாறியுள்ளது. இதைமத்திய அரசும் அங்கீகரித்துள்ளது. ஆனால் அது போதாது, ஊழல் சிறிதளவும் இல்லா மாநிலமாக மாற வேண்டும். கேரளத்தில் இன்று யார் ஊழல் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நிலை ஏற்பட்டுள்ளதுஎன தெரிவித்தார்.

இடதுசாரி அரசு எப்போதும் ஏழைகளின் பக்கம் நிற்கும். சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் இதை தெளிவுபடுத்தும். மூன்றேகால் ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வூதியம் வழங்க வேண்டிய ரூ.1800 கோடியை கடந்த  அரசு நிலுவையில் வைத்திருந்தது. அந்தத் தொகை தற்போது வழங்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் புதிதாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
.
பெருவெள்ளத்தில் வீடுகளை இழந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்பட்டன.. மூன்றாண்டுகளில் பொதுக்கல்வி நிறுவனங்களில் 5 லட்சம் வரையிலான மாணவ - மாணவிகள் புதிதாக சேர்ந்துள்ளனர்.

இதே போல் கேரள மாநிலத்தில் அரசுப் பணியாளர் நியமனத்துக்கு முந்தைய காங்கிரஸ் அரசு விதித்திருந்த தடையை விலக்கியதுடன் 3 ஆண்டுகளில் ஒருலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும், 22,500 புதிய பணியிடங்களையும் தோற்றுவித்துள்ளதாகவும் மம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!