பள்ளிக்கூடம் திறப்பு... மாபெரும் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!

Published : Oct 07, 2021, 11:07 AM IST
பள்ளிக்கூடம் திறப்பு... மாபெரும் அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி..!

சுருக்கம்

ஒன்றாம் வகுப்பு  படிக்கும் குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்களும் இருக்கலாம் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.     

ஒன்றாம் வகுப்பு  படிக்கும் குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்களும் இருக்கலாம் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
   
இதுகுறித்து, திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ‘’தற்போது பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி மேலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

வருகிற 1-ம் தேதி முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் முதல் முறையாக 1-ம் வகுப்பிற்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு எப்படி முககவசம் அணிவது என்பது கூட தெரியாத நிலை இருக்கும். ஆகவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்து வந்து உடன் இருக்கலாம். குழந்தைகளால் மாஸ்க் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்ற நிலை வருகிறதோ, அப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லலாம்.

உலக சுகாதார அமைப்பு இந்த தொற்றை விட மிகப்பெரிய தொற்று குழந்தைகளின் மனநிலை தான் என கூறியுள்ளது. அதனை மையப்படுத்தி பள்ளிகளை திறக்க வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500.! புது ரூல்ஸ் வந்தாலும் இவங்களுக்கெல்லாம் கண்டிப்பா கிடைக்கும்.!
C.Vijayabaskar Join TVK: டெல்டாவே காலியாகிறது.! எடப்பாடிக்கு சவால்விட்ட விஜயபாஸ்கர்.! மாமல்லபுரத்தில் மாஸ் காட்டிய ஜெயலலிதா விசுவாசி.!