வாட்டி வதைக்கும் வெயில்.. பள்ளி திறப்பு தள்ளிப்போகிறது? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published May 24, 2023, 6:43 AM IST
Highlights

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு அரசுப் பள்ளிகள் ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த நில நாட்களாக இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவுறுத்தியுள்ளன. 

இதையும் படிங்க;- மக்களை வாட்டி வாதைக்கும் கோடை வெயில்.. அரசு பள்ளிகளை ஜுன் 1ம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம்? ராமதாஸ்.!

இந்நிலையில், ஜுன் 1ஆம் தேதி அரசுப் பள்ளிகளை திறப்பது மாணவர்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது. பெரியவர்களே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜுன் 1ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயமா? பள்ளி திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியிருந்தார். 

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்;- ஜூன் ஒன்றாம் தேதி 6ம் முதல் 12ம் வகுப்பு வரையிலும், அதேபோன்று ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் 5ம் தேதி பள்ளிகள் திட்டமிட்டவாறே திறக்கப்படும். பள்ளித் திறப்பில்  மாற்றம் இருந்தால் முதல்வர் அதனை அறிவிப்பார்.

இதையும் படிங்க;-  டாஸ்மாக் கொள்ளையன் பாலாஜி! பதவி நீக்கம் செய்யுங்கள்! தஞ்சை பார் மரணத்திற்கு பதில் என்ன? கிருஷ்ணசாமி ஆவேசம்.!

தனியார் பள்ளி வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பள்ளி மாணவர்களுக்கு  வழக்கம் போல சைக்கிள், லேப்டாப் வழங்கப்படும். பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். அதற்கு தேவையான பாடப் புத்தகங்கள் கையிருப்பில் உள்ளது எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

click me!