11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி.

Published : Jun 09, 2021, 08:17 AM IST
11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வு.. பள்ளிக் கல்வித் துறை அதிரடி.

சுருக்கம்

10-ம் வகுப்பில் மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வை கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது.  

10-ம் வகுப்பில் மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளி அளவிலான நுழைவுத் தேர்வை கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2020-2021-ம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு கொரோனா பேரிடரைக் கருத்தில் கொண்டு All Pass வழங்கப்பட்டது. 

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை மதிப்பெண் கணக்கிட்டு வழங்கப்படாத நிலையில், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்றும், மாணவர்களின் விருப்பத்துக்கேற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்கிட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

ஏதேனும் குறிப்பிட்ட பிரிவில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதலான மாணவர்கள் விண்ணப்பித்தால், 15% வரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும், மிக அதிகமான அளவில் விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் 50  தேர்வு நடத்தி மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ஜூன் 3-ம் வாரத்துக்குள் வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்றும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித்தொலைக்காட்சி வாயிலாகவும், தொலைத்தொடர்பு முறையிலும் பாடங்களை நடத்த வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்
100 பேர் கூட இல்லாத டாக்டர் ராமதாஸ் டெல்லி போராட்டம்..! ஒங்கும் அன்புமணி கை