அரசியல் ஒருபக்கம்… ஆராய்ச்சி ஒருபக்கம்… படிக்க போன பள்ளிக்கல்வி அமைச்சர்..!!

By manimegalai aFirst Published Sep 18, 2021, 9:52 AM IST
Highlights

சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி இப்போது மீண்டும் படிப்பு பக்கம் தமது கவனத்தை திருப்பி அசர வைத்திருக்கிறார்.
 

சென்னை: பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி இப்போது மீண்டும் படிப்பு பக்கம் தமது கவனத்தை திருப்பி அசர வைத்திருக்கிறார்.

எந்தவித பெரிய விமர்சனங்களும் இன்றி கம்பீரமாக நடை போட்டு கொண்டு இருக்கிறது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி மக்கள் உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் இருக்கின்றனர்.

அதிலும் அமைச்சர்களில் சிலர் தங்களது துறையை கையாளும் விதம் மக்கள் மத்தியில் நன்றாகவே கவனிக்கப்படுவதோடு பாராட்டுகளையும் தந்து வருகிறது. குறிப்பாக, இந்த கொரோனா கோரப்பிடியில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நிலை என்னவாகும் என்ற பதைபதைப்பு பெற்றோரிடமும், ஆசிரியர்களிடமும் இருக்கும் நேரத்தில் பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் நடவடிக்கைகள் பாராட்டும் படியாக உள்ளன.
 
பொதுத் தேர்வு, பள்ளிகள் திறப்பு போன்ற விஷயங்களில் அவர் கூறிய கருத்துகள் வெகுவாக கவனிக்கப்பட்டது. அதிலும் அண்மை காலத்தில் அனைத்து மாணவர்களையும் ஆல் பாஸ் என்று அறிவிச்சிட்டு போயிடலாம், எல்லாரும் அரசை பாராட்டுவாங்க… ஆனா மாணவர்கள் எதிர்காலத்தை பத்தி தான் கவலைப்படுகிறோம் என்று அவர் பேட்டி ஒன்றில் சொன்னது பெற்றோர்களை ஈர்த்தது. 

இந் நிலையில் அமைச்சராக ஒருபக்கம் இருக்கும் அவர் தற்போது ஆராய்ச்சி மாணவராகவும் மாறி இருக்கிறார். திருச்சியில் உள்ள தேசிய கல்லூரியில் உடற்கல்வித்துறையில் பிஎச்டி ஆராய்ச்சி படிப்பை தொடங்கி இருக்கிறார். அதற்கான முன்வடிவத்தை அவர் சமர்ப்பித்து உள்ளார். அமைச்சராக தொடர்ந்து கொண்டே பிஎச்டி படிப்பிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

click me!