பிரதமர் மோடியைத் தோற்கடிக்கும் திறன் ராகுல் காந்திக்கு இல்லை.. திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யின் அனல் பேச்சு.!

By Asianet TamilFirst Published Sep 17, 2021, 9:56 PM IST
Highlights

பிரதமர் மோடியை தோற்கடிக்கும் திறன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கிடையாது என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
 

பாஜகவுக்கும் எதிராகவும் பிரதமர் மோடி அரசுக்கு எதிராகவும் 2024-ஆம் ஆண்டு தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரட்டும் முயற்சிகள் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. சுதிப் பந்த்யோபத்யாய் பேசிய பேச்சு டெல்லி அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அவர் பேசிய பேச்சு இதுதான்.
 “2024-ஆம் ஆண்டு தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்கட்சிகளின் தலைவராக மம்தா பானர்ஜியே இருக்க வேண்டும். மம்தாவே எதிர்கட்சிகளின் ஒருங்கிணைந்த தலைவராக இருக்க வேண்டும் என எங்கள் கட்சி விரும்புகிறது. ராகுல் காந்தியை நான் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். அவர் பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவராக தன்னை மேம்படுத்திக் கொள்ளவில்லை. 
பிரதமர் மோடியை தோற்கடிக்கும் திறன் ராகுல் காந்திக்கு கிடையாது. இதை வைத்து காங்கிரஸ் இல்லாத கூட்டணி குரித்து நான் பேசுவதாக எண்ண வேண்டாம். ஒட்டுமொத்த தேசமும் மம்தா பானர்ஜியை விரும்புகிறது. அடுத்த தேர்தலில் அவரே எதிர்கட்சிகளின் முகமாக இருப்பார். அதை மையப்படுத்தி நாங்கள் பிரச்சாரம் செய்வோம். தேர்தலில் ராகுல் காந்தியால் மோடியை வீழ்த்த முடியாது. இடதுசாரிகளும் மதிப்பிழந்துவிட்டார்கள்.” என்று பேசியிருக்கிறார் சுதிப் பந்த்யோபத்யாய்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியை எப்படி வீழ்த்துவது என்று ஒட்டுமொத்த பாஜகவும் களமிறங்கியது. ஆனால், அந்தத் தேர்தலில் பாஜகவை தோல்வியடைய செய்து மூன்றாவது முறை பிரமாண்ட வெற்றியைப் பதிவுசெய்தார் மம்தா பானர்ஜி. இதனால், தேசிய அளவில் மம்தாவுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.யும் அந்தக் கருத்தை மையப்படுத்தி பேசியிருப்பது அரசியல் அரங்கில் பேசு பொருளாகியிருக்கிறது. 

click me!