பொதுத்தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்த அமைச்சர்...

First Published Jun 12, 2018, 5:37 PM IST
Highlights
School Education Minister Sengottaiyan - journalists meeting


இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு 2019 ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி தொடங்கும் பொதுத்தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் மார்ச் 19 வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றார். 

2019 மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும். 

மாணவர்கள் தேர்வுக்கு மன அழுத்தம் இன்றி தயாராக தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பதாகவும் கூறினார். 

தேர்வு முடிவுகளும் வழக்கத்தை விட 10 நாட்கள் முன்னதாகவே வெளியிடப்பட உள்ளன. 

19.04.2019 அன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அவர் அறிவித்தார். 8.5.2019 அன்று பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் 29.04.2019 அன்று 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அப்போது அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.

முன்னதாக, சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதைத் தடுக்க, அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுகின்றன என்றார்.

இது தவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 5,000 மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் மூலம் மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆங்கில மோகத்தால் பெற்றோர்கள், தங்களின் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஆரம்ப பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடிகளில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி தர முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

click me!