காட்சிகள் மாறின... களங்கள் மாறின... மு.க.ஸ்டாலினுக்கு சரத்குமார் திடீர் பாராட்டு..!

Published : May 31, 2021, 07:11 PM IST
காட்சிகள் மாறின... களங்கள் மாறின... மு.க.ஸ்டாலினுக்கு சரத்குமார் திடீர் பாராட்டு..!

சுருக்கம்

சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியோடு இணைந்து சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்டது.  

பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடு உள்ளதாக சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘’கொரோனா சிகிச்சை பிரிவில் பாதுகாப்பு கவச உடை அணிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆய்வு செய்ததில் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு பெரும் நம்பிக்கையும், ஊக்கமும் அளித்தது மட்டுமன்றி பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டதை வரவேற்கிறேன்.

கொரோனா பாதிப்பால் பெற்றோரில் ஒருவரை இழந்த ஆதரவற்ற குழந்தைகளின் பாதுகாப்புக்காக தலா 5 லட்சம் வங்கியில் வைப்புத்தொகை, கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை என நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்கும் தேவையான பணிகளை செய்யும் தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்’’எனத் தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியோடு இணைந்து சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்டது.
 

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!