வாயைத் திறந்தால் அரெஸ்ட்... லிஸ்டை கையில் வைத்துக் காத்திருக்கும் திமுக... அலறும் 16 முன்னாள் அமைச்சர்கள்..!

Published : May 31, 2021, 06:32 PM ISTUpdated : May 31, 2021, 06:34 PM IST
வாயைத் திறந்தால் அரெஸ்ட்... லிஸ்டை கையில் வைத்துக் காத்திருக்கும் திமுக... அலறும் 16 முன்னாள் அமைச்சர்கள்..!

சுருக்கம்

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், அமைதியாக இருக்கிறார்கள். இன்னும் சில முன்னாள்களோ திமுக ஆட்சியை பாராட்டி புகழ்ந்து தள்ளி வருவதற்கும் இது தான் காரணம் என்கிறார்கள். 

முன்னாள் அமைச்சர்கள் 16 பேருடைய ஊழல் தொடர்பான ரிப்போர்ட் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்கள். குறிப்பாக அந்த முன்னாள் அமைச்சர்கள் பட்டியலில் ஏழு பேரை உடனடியாக கைது செய்கிற அளவிற்கு வழக்கில் முகாந்திரம் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து, ஆளுங்கட்சி தலைமைக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.

 

கொரோனா தடுப்பு பணியில் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்தால் அது மக்களிடையே திமுக மீது அதிருப்தியை ஏற்படுத்தும். எனவே, கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என அரசு தரப்பிலிருந்து உத்தரவு போட்டு இருக்கிறார்களாம். அதே நேரம், தி.மு.க., ஆட்சி மீது,  அந்த முன்னாள் அமைச்சர்களில் யார் முதலில் எதிர்ப்புக் குரல் கொடுக்கிறாரோ, அவர் மீது தான், முதல் வழக்கை பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்கள்.

அதனால்தான், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், அமைதியாக இருக்கிறார்கள். இன்னும் சில அமைச்சர்களோ திமுக ஆட்சியை பாராட்டி புகழ்ந்து தள்ளி வருவதற்கும் இது தான் காரணம் என்கிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

TVK vs Congress: காங்கிரஸ் எச்சரித்தும் கேட்காத தவெக! விஜய் பிரதமர் விவகாரத்தில் கூட்டணி விரிசலா?
DA Hike: அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு! சட்டசபையில் வெளியான சூப்பர் அறிவிப்பு