நீண்ட இழுபறிக்குப் பின் காவிரி வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்...

First Published May 14, 2018, 12:20 PM IST
Highlights
SC hearing Cauvery dispute case again today


காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் வரைவு திட்டத்தை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். நீண்ட இழுபறிக்குப் பிறகு உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று காவிரி நதிநீர் பங்கீடுதொடர்பான வரைவு திட்டம் இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி வழக்கில் கடந்த பிப்ரபரி மாதம் 12 ஆ மதேதி தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் 6 வாரங்களுக்குள் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

6 வார காலம் முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இது தொடர்பன வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மே 3 ஆம் தேதிக்குள் காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு மீண்டும் அவசாகம் கோரியது. தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம்உத்தரவு பிறப்பித்தது. ஆனால், கர்நாடக அணைகளில் போதிய நீர் இல்லை என்பதால் தண்ணீர் தர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்தது.

உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்தபோது, கர்நாடக தேர்தலைக் காரணம் காட்டி, மத்திய அரசு வரைவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது. இதையடுத்து இன்று (மே 14) ஒத்தி வைத்தது. மேலும் காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. 

இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகிட காவிரி நதிநீரை பகிர்வதற்கான மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கான வரைவு திட்டத்தை தாக்கல் செய்தார். கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் இன்று காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அமைப்பு குறித்து யு.பி.சிங் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை காவிரி அமைப்பு மேற்கொள்ளும் என்றும் யு.பி.சிங் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டுக்கு 10 பேர் கொண்ட அமைப்பை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், 4 மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஒரு உறுப்பினர் காவிரி அமைப்பில் இடம் பெறுவார் என்றும் யுபிசிங் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒரு நிரந்தர உறுப்பினர், 2 பகுதிநேர உறுப்பினர்கள் காவிரி தொடர்பாக அமைக்கப்பட உள்ள குழுவில் இடம் பெறுவார்கள்.  உச்சநீதிமன்றத்தில் ஹ காவிரி வரைவு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில், இந்த வழக்கு மே 16 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

click me!