எஸ்பிபி எனது முதல் ஸ்பான்சர்.. பாடும் நிலாவை நினைவுகூர்ந்த பிரபல செஸ் வீரர் விஸ்வநாத் ஆனந்த்.!!

By T BalamurukanFirst Published Sep 25, 2020, 10:10 PM IST
Highlights

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். "பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவுக்கு பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 25.09.2020 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 74. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டுத் துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பிரபல இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில்.., "இவ்வளவு பிரபலமான மற்றும் எளிமையான நபர் காலமானதை கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவர் எனது முதல் ஸ்பான்சர்! அவர் 1983 ஆம் ஆண்டில் தேசிய அணி சாம்பியன்ஷிப்பில் எங்கள் அணி சென்னை கோல்ட்ஸுக்கு நிதியுதவி செய்தார். நான் சந்தித்த மிகச்சிறந்த நபர்களில் ஒருவர். அவரது இசை எங்களுக்கு அத்தகைய மகிழ்ச்சியை அளித்தது."

click me!