Sathyaraj: என்ன இது..? நாத்திகம் மேடையில் மட்டும்தானா..? ஆதாரத்துடன் விமர்சித்த ராம ரவிக்குமார்.

Published : Dec 14, 2021, 05:09 PM IST
Sathyaraj: என்ன இது..? நாத்திகம் மேடையில் மட்டும்தானா..? ஆதாரத்துடன் விமர்சித்த ராம ரவிக்குமார்.

சுருக்கம்

திரைப்பட நடிகர் திரு சத்யராஜ் அவர்களின் சகோதரி சமீபத்தில் காலமானார் வருந்தத்தக்க நிகழ்வு. அவருடைய அஸ்தியை காவிரியில் கரைத்து, நீத்தார் கடன் நிறைவு செய்தல் நிகழ்வில் திரு.சத்யராஜ் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார். 

பெரியாரின் கருத்துக்களை உள்வாங்கி நாத்திகராக வலம் வரும் நடிகர் சத்யராஜ், சமீபத்தில் இறந்த அவரது சகோதரியின் அஸ்தியை காவிரியில் கலக்கும் நிகழ்வில் பங்கேற்றுள்ளதை சுட்டிக்காட்டி, இந்து தமிழ் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் " மேடையில் மட்டும்தான் நாத்திகமா" என சத்யராஜுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மேடைகள் தோறும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெரியாரின் கருத்துக்களை  நடிகர் சத்யராஜ் பேசிவரும் இலையில் ராம ரவிக்குமார் இவ்வாறு அவரை விமர்சித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் பயங்கர நக்கல் பேர்வழி.. லொள்ளுக்கு பெயர் போனவர் என பலரும் அவரை குறிப்பிடுவது உண்டு. அதே நேரத்தில் தனது சிறந்த நடிப்பால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளவர் அவர். ஒன்பது ரூபாய் நோட்டு, பெரியார், பாகுபலி என பல படங்களில் தனது அபார நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகர் என பெயர் பெற்றவர் சத்யராஜ். அவரின் இயற்பெயர் ரங்கராஜன், இவரது பெற்றோர் சுப்பையா மற்றும்  நாதாம்பாள், கோவையை சேர்ந்தவர் என்பதால் கோவைக்கு உரிய  குசும்பு இயல்பாகவே அவருக்கு உண்டு. இவர் இளங்கலை தாவரவியல் படித்த மாணவர் ஆவார். 

சிறுவயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி சென்னைக்கு கிளம்பிய நடிகர்களின் ஒருவர். பின்னர் தன் திறமையால் முயற்சியால் திரைப்படத்தில் கால்பதித்து வெற்றி நடிகராக உயர்ந்தார். சத்யராஜ் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஆவார். நடிகர் சத்யராஜ் சுயமரியாதை கொண்டவர், சுய வாழ்க்கை மட்டுமின்றி திரை வாழ்க்கையிலும் எதைப்பற்றியும் கவலைப்படாதவர். தமிழ் பற்று அதிகம் கொண்டவர் என்று பல முகங்கள் அவருக்கு உண்டு.

கொள்கை ரீதியாக, அரசியல் ரீதியான கருத்துக்களையும் அச்சமின்றி எடுத்துவைக்கும் தைரியம் கொண்டவர், திராவிடர் கழகம் நடத்தும் மேடைகளில் ஏறி பெரியாரிய கருத்துக்களையும், பெரியார் முன்வைத்த சமூகநீதி கருத்துக்களையும் பேசும் ஒரே கொள்கை நடிகர் சத்யராஜ். அவர் நடித்த பெரியாரின் வாழ்க்கை வரலாறு படம் தமிழக அரசியலில், திராவிட அரசியலில் ஆவணம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பெரியாரிய கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவராகவும், முழுக்க முழுக்க மூடநம்பிக்கைக்கு எதிராக சேசுபவராகவும், தன்னை ஒரு முழு நாத்திகவாதியாகவுமே அவர் அடையாளப் படுத்திக் கொண்டுள்ளார். பெரியாரிய கருத்துக்களுக்கு எதிராகவும், பெரியார் சிலைகள் அவமதிக்கப்படும் போதும், அதை வெளிப்படையாக பகிரங்கமாக எதிர்க்க கூடியவர் சத்யராஜ்.

இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த தனது சகோதரியில் அஸ்தியை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.அதற்கான புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அந்த புகைப்படத்தை சுட்டிக்காட்டி, இந்து தமிழ் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார். நாத்திகம் மேடைகளில் மட்டும்தானா என சத்தியராஜை விமர்சித்துள்ளார். மேலும் அவர் இது தொடர்பாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து பின்வருமாறு:- 

திரைப்பட நடிகர் திரு சத்யராஜ் அவர்களின் சகோதரி சமீபத்தில் காலமானார் வருந்தத்தக்க நிகழ்வு. அவருடைய அஸ்தியை காவிரியில் கரைத்து, நீத்தார் கடன் நிறைவு செய்தல் நிகழ்வில் திரு.சத்யராஜ் அவர்கள் கலந்து கொண்டிருக்கிறார். மேடைகளில் நாத்திக வாதம் பேசுவது இந்து நம்பிக்கைகளை,சடங்கு சம்பிரதாயங்களை கொச்சைப்படுத்துவது, ஈவேரா புகழ் பாடுவது. என்று எத்தனையோ விஷயங்களை திரு சத்யராஜ் செய்திருக்கிறார்.ஆனாலும்கூட இந்து நம்பிக்கை சார்ந்த விஷயங்களுக்கு உடன் சென்று இருக்கிறார் என்ற செய்தியை பதிவு செய்துகொள்கிறேன். இதேபோல் கடந்த ஆண்டு விசிக தலைவர் திருமாவளவன் அவர்களின் சகோதரி காலமானார்.

மேடைகளில் சனாதனத்தை வேரறுப்போம் என்று சொல்லும் அவர் தனது வீட்டில் 16ஆம் நாள் காரியங்களை  யாகம் வளர்த்து ,தலைவாழை இலை போட்டு நீத்தார் கடன் நிறைவு செய்தார்.மேடைகளில் மட்டும் நாத்திகவாதம், சனாதனம் வேரறுப்போம் என்று பேசுவது தனது வீடுகளில் அனைத்து இந்து சமய பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பது இரட்டை வேடம் ஆக தெரியவில்லையா? சரி நடிகர்கள்தான் நாம் என்ன செய்ய முடியும்! நாத்திகவாதம் வேரறும்போம் ! நான்மறை வழியில் வாழ்வு அமைப்போம்! நமது நெறிகள் போற்றிடுவோம்! என்று குறிப்பிட்டுள்ளதுடன், இந்த படம்: கொடுமுடி காவிரிக்கரை அல்லது உஞ்சனூர் காவிரிக்கரையா ஆக இருக்கலாம் என அவர் பதிவிட்டுள்ளார்.  
 

PREV
click me!

Recommended Stories

பெருந்துறையில் இடம் மாறும் விஜய் பிரச்சாரம்..! அடேங்கப்பா உள்குத்து அரசியல்..! புகுந்து விளையாடும் திமுக- அதிமுக புள்ளிகள்..!
கடப்பாறை... தீயணைப்பு வண்டி... கதி கலங்கும் சவுக்கு சங்கர் வீட்டு ஏரியா.. எந்த நேரமும் அரெஸ்ட்