நேற்று சசிகலா...! இன்று மு.க ஸ்டாலின்...! பசும்பொன்னார் சிலை முன்பு குவியும் விஐபிக்கள்.

By Ezhilarasan BabuFirst Published Oct 30, 2021, 10:01 AM IST
Highlights

அதே நாளில் சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் சிலைக்கு அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து சிறப்பிக்க உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை முன்னிட்டு ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்கான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என முழங்கியவர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் என்கிற ஊரில் ஜமீன் குடும்பத்தில் 1908ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள் பிறந்தார் முத்துராமலிங்கம். இளம் வயதிலேயே தாயை இழந்தவர், இஸ்லாமிய தாய் ஆயிஷா பீவி அவர்களின் மார்பில் பால் குடித்து வளர்ந்தவர் ஆவார். அதனால் இஸ்லாமிய மக்களின் மீது அளவற்ற அன்பும், பாசமும் கொண்டிருந்தார். 

தன் இளம் பருவத்தில் அந்நிய நாட்டிடம் இந்தியா அடிமைப்பட்டு இருப்பதை உணர்ந்த முத்துராமலிங்கம் தீவிர சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். மிகுந்த பேச்சாற்றலும், சொல்லாற்றலும் மிக்க நபரான முத்துராமலிங்க தேவர், சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் தலைமையில் உருவான இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியவர் ஆவார். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் மிக ஆற்றலுடன் பேசக் கூடியவர் அவர். தென்தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் அவரின் தனித்தன்மை அரசியலை பறைசாற்றியது. மெட்ராஸ் மாகாணத்தில் ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமலில் இருந்த கொடுமையான குற்றப்பரம்பரை என்கிற சட்டத்திற்கு எதிராக முதலில் போராடி அச்சத்தை அகற்றியவர் ஆவார். 30-10-1908 ஆம் ஆண்டு பிறந்தவர் அவர், அதே 30-10-1963ஆம் ஆண்டு தான் பிறந்த தேதியிலேயே மறைந்தார். அது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. 

ஆண்டுதோறும் அவரின் பிறந்த தினம் மற்றும் குருபூஜை விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு கொண்டாடி வருகிறது. தேவரின் குருபூஜை விழா தமிழக அரசியலை தென் மாவட்டங்களில் நிர்ணயிக்கும் அளவுக்கு செல்வாக்குமிக்கதும், பிரசித்தி பெற்றதாகவும் இருந்து வருகிறது. சசிகலா தனது இரண்டாவது  அரசியல் பிரவேச சுற்றுப் பயணத்தை தேவர் நினைவிடத்தில் அஞ்சல் செலுத்தி தொடங்கியுள்ளார். தேவர் நினைவிடத்தில் நேற்று அவர் அஞ்சலி செலுத்தினார்,  இந்நிலையில் பசும்பொன் தேவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னில் அமைந்துள்ள தேவரின் திருவருள் நினைவிடத்தில் மாலர் வளையம் சாற்றி மரியாதை செலுத்தி உள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டி செய்திக்குறிப்பில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 114 வது பிறந்தநாள் மற்றும் அவரது 59வது குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில் 30- 10- 2021 அன்று காலை 9 மணி அளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்கள். 

அதே நாளில் சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் சிலைக்கு அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து சிறப்பிக்க உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள நேற்றைய தினமே முதல்வர் ஸ்டாலின் மதுரை வந்திருந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பசும்பொன் செல்லும் வழியில் மதுரை தெப்பக்குளத்தில் இருந்த மருது சகோதரர்களின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சசிகலா நேற்று அஞ்சலி செலுத்திய நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தேவர் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் மதுரை கோரிப்பாளையம் மற்றும்  பசும்பொன்னில் தேவருக்கு மரியாதை செலுத்த ஏராளமான அரசியல் பிரமுகர்கள், சாதி மதம் கடந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் என மக்கள் அணி அணியாக திரண்டு வருகின்றனர். தேவர் குருபூஜைக்கு அஞ்சலி செலுத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு மாவட்ட காவல்துறை அனுமதி வழங்காது என கூறப்பட்டு வந்த நிலையில், சசிகலாவும் தமிழக முதலமைச்சரும் அஞ்சலி செலுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!