ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா... பாதிப்பு திமுக.,விற்கா..? அதிமுகவுக்கா..?

Published : Feb 11, 2021, 10:17 AM IST
ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா... பாதிப்பு திமுக.,விற்கா..? அதிமுகவுக்கா..?

சுருக்கம்

அதிமுக, திமுக-விற்கு எந்த விதமான சாதக, பாதகங்களை ஏற்படுத்தும் என்பது பற்றியும் அவர் விரிவாக விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமமுக மாவட்டச் செயலாளர்களுடன் சசிகலா இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, பெங்களூரிலுள்ள பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டார். 4 ஆண்டுகால தண்டனைக் காலம் நிறைவடையும் தருவாயில் சிறையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொற்று குணமானதும் அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து தொண்டர்கள் படைசூழ சென்னை திரும்பினார். இந்நிலையில் அமமுக மாவட்ட செயலாளர்களுடன் சசிகலா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 234 தொகுதிகளிலும் அமமுக தனித்து போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்தும், அதிமுக, திமுக-விற்கு எந்த விதமான சாதக, பாதகங்களை ஏற்படுத்தும் என்பது பற்றியும் அவர் விரிவாக விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அதிமுக - அமமுக ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தால் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முடியுமா என்பது குறித்தும் சசிகலா ஆய்வு நடத்துகிறார்.

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!