சுடிதார், நைட்டி எல்லாம் போயே போச்சு..!! கைதி உடையில் சசிகலா!!!

Asianet News Tamil  
Published : Jul 23, 2017, 09:25 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
சுடிதார், நைட்டி எல்லாம் போயே போச்சு..!! கைதி உடையில் சசிகலா!!!

சுருக்கம்

sasikala wears prisoner dress

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்டு வந்த  அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டதையடுத்து தற்போது அவர் கைது உடையில் சாதாரண அறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சிறப்பு சலுகைகள் பெற்றதாக எழுந்த புகார் நாடு  முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தை அம்பலப்படுத்திய சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, இது தொடர்பாக அடுத்தடுத்து அறிக்கைகள் வெளியிட்டும், பேட்டி அளித்தும் கடும் நெருக்கடியை உண்டாக்கி வருகிறார்.

இதையடுத்து டிஜிபி சத்யராராயண ராவ், ரூபா உள்ளிட்ட அனைரும் கூண்டோடு மாற்றப்பட்டனர். அதே நேரத்தில் சசிகலாவுக்கு சிறையில் ஒதுக்கப்பட்ட 5 அறைகள், சசிகலா சுதந்திரமாக சாதாரண உடையில் சிறைக்குள் நடமாடுவது போன்ற காட்சிகள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சனை தற்போது பூதாகரமாக ஆக்கப்பட்ட நிலையில் சசிகலாவுக்கு சிறையில் வழங்கப்பட்டு வந்த அத்தனை சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற சிறைக் கைதிகளைப் போல சாதாரண அறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கைதிகளுக்கான உடைக்கு மாறியுள்ளார்.

மேலும் சசிகலா முக்கி பிரமுகர்களை  சந்திக்க வழங்கப்பட்டு வந்த சிறப்பு அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!