கேரள பா.ஜனதா பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்….மருத்துவ கவுன்சில் ஒப்புதல் பெற ரூ.5 கோடி லஞ்சம்

Asianet News Tamil  
Published : Jul 23, 2017, 06:50 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
கேரள பா.ஜனதா பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்….மருத்துவ கவுன்சில் ஒப்புதல் பெற  ரூ.5 கோடி லஞ்சம்

சுருக்கம்

kerala BJP take action

கேரள பா.ஜனதா பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கம்….மருத்துவ கவுன்சில் ஒப்புதல் பெற  ரூ.5 கோடி லஞ்சம்

இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் அனுமதி பெற்றுத்தருவதாகக் கூறிகேரளாவில் தனியார் மருத்துவமனையிடம் இருந்து ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்பட்ட புகாரைத் தொடர்ந்து மாநில பாஜக பிரமுகர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பா.ஜனதா கட்சியின் கூட்டுறவு பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் ஆர்.எஸ்.வினோத். இவர்ர் இந்திய மருத்துவக் கவுன்சில் அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறிக ஒரு தனியார் மருத்துவமனையிடம் ரூ.5 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாஜக குழு நடத்திய விசாரணை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதல்வர் பினராயி விஜயன உத்தரவிட்டார். இது தொடர்பாக பாலக்காடு தொகுதியின் எம்.பி.யான மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜேஷ், வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், பாஜகவில் இருந்து ஆர்.எஸ்.வினோத் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக, மாநிலத் தலைவர் கும்மணம் ராஜசேகரன் அறிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!
அதிமேதாவிகளுக்கு பதில் சொல்ல முடியாது.. ஒரேடியாக முடிச்சு விட்ட ப.சிதம்பரம்! கதர் கட்சியில் கலகம்!