எங்களுக்கு வேற வேலையே இல்லையா.. இதுதான் எங்களுடைய வேலையா.. சசிகலா விவகாரத்தில் கடுப்பான எல்.முருகன்..!

By vinoth kumarFirst Published Mar 3, 2021, 3:55 PM IST
Highlights

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. உரியநேரத்தில் அறிவிப்போம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. உரியநேரத்தில் அறிவிப்போம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்களுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்வதற்காக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.அதிமுகவைப் பொறுத்தவரை பாமகவுடன் தொகுதி பங்கீட்டை முடித்த நிலையில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷாவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினார். அவர்களுக்கிடையே சுமார் 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சுவார்த்தையின் போது, சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது குறித்தும், அமமுகவை கூட்டணியில் இணைப்பது குறித்தும் பேசியதாக செய்திகள் வெளியாகின. சசிகலாவை மீண்டும் இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தொகுதி பங்கீடு தாமதமாகிறது என்றும் கூறப்பட்டது. 

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சசிகலா, டிடிவி தினகரன் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த தலையீடும் இல்லை. இது எங்களுடைய வேலை இல்லை, எங்கள் கட்சியைப் பற்றிதான் நாங்கள் கவலைப்படுகிறோம். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. உரியநேரத்தில் அறிவிப்போம் என எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர் திமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வராது. மீண்டும் ஆட்சிக்கு வந்து திமுக நிலம் அபகரிக்கும் வேலையைச் செய்யும். அதை மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அந்த வாய்பை திமுகவிற்கு மக்கள் கொடுக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

click me!