தமிழகத்தில் நான்கு துணை முதல்வர்கள்... பட்டையைக் கிளப்பும் தேர்தல் அறிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Mar 3, 2021, 3:21 PM IST
Highlights

மக்களுக்கு ஆற்றும் பணியை அதிகாரத்தை பரவலாக்க ஆட்சியை எளிமையாக்க தமிழகத்திற்கு 4 துணை முதலமைச்சர்கள், வி.ஏ.ஓ எனும் கிராம நிர்வாக அதிகாரியை போன்றே கிராம வளர்ச்சி அதிகாரி என்னும் விடிஓ என்கிற ஒரு பதவியை கொண்டு வருவேன் என்று கூறுகிறார். 

பாஜகவில் அறிவுசார் பிரிவில் இருந்த அர்ஜுனமூத்தி, ரஜினி மக்கல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்று அறிவித்த உடன், இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியை ஆரம்பித்து தனது தேர்தல் அறிக்கைகளை அறிவித்துள்ளார். அவருக்கு எந்திரன் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது தேர்தல் அறிக்கையில், மக்களுக்கு ஆற்றும் பணியை அதிகாரத்தை பரவலாக்க ஆட்சியை எளிமையாக்க தமிழகத்திற்கு 4 துணை முதலமைச்சர்கள், வி.ஏ.ஓ எனும் கிராம நிர்வாக அதிகாரியை போன்றே கிராம வளர்ச்சி அதிகாரி என்னும் விடிஓ என்கிற ஒரு பதவியை கொண்டு வருவேன் என்று கூறுகிறார். 

என்னுடன் பணியாற்ற விருப்பமுள்ள ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகளை விரைவில் சந்திப்பேன் என்று தெரிவித்துள்ள அர்ஜுனமூர்த்தி, ’’பள்ளிக் கல்வியை தவறவிட்டவர்கள் /பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்காதவர்களும் இதில் பயின்றிடலாம். கேம்பஸ் இன்டெர்வியூ -  உடனடி வேலை. நிபுணர்களை கொண்டு திறன் மேம்பாட்டு பயிற்சி. அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழும் உண்டு.

கிராம தன்னிறைவுக்கு "கிராம வளர்ச்சி அதிகாரி" நியமனம். அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பார். திட்டங்களின் பயன்பாட்டினை கண்காணித்திடுவார். ஆயரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். மகளிரை அதிகாரப்படுத்த ஒரு பெண் துணை முதல்வர். அறிவுசார் யுகத்தை எதிர்கொள்ள ஒரு துணை முதல்வர். அம்பேத்கர் கனவு மெய்ப்பட ஒரு பட்டியலின துணை முதல்வர். அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத சமூகத்திற்கு ஒரு துணை முதல்வர்’’ என தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். 

என்னுடன் பணியாற்ற விருப்பமுள்ள ரஜினி ரசிகர்மன்ற நிர்வாகிகளை விரைவில் சந்திப்பேன் - இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் ரா. அர்ஜுனமூர்த்தி . pic.twitter.com/06M11Ru7aA

— IMMK | இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி (@immkofficial)

 

click me!