பரபரக்கும் அதிமுக முகாம்…. சுற்றுப்பயண திட்டத்தை கையில் எடுத்த சசிகலா…!

Published : Oct 21, 2021, 09:20 AM IST
பரபரக்கும் அதிமுக முகாம்…. சுற்றுப்பயண திட்டத்தை கையில் எடுத்த சசிகலா…!

சுருக்கம்

தமிழகம் முழுக்க அதிமுக தொண்டர்களை சந்திக்கும் வகையில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சென்னை: தமிழகம் முழுக்க அதிமுக தொண்டர்களை சந்திக்கும் வகையில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அண்மையில் நடந்து முடிந்த அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தில் தமது 2வது இன்னிங்ஸ் அரசியல் ஆட்டத்தை சசிகலா தொடங்கி இருக்கிறார். ஜெ. நினைவிடத்தில் கண்ணீர்விட்டது, எம்ஜிஆர் நினைவிடம் சென்றது, பின்னர் அங்கு அதிமுக பொது செயலாளர் வி.கே. சசிகலா என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தது என ஏக ஸ்பீடில் இருக்கிறார்.

கல்வெட்டு விவகாரம் அதிமுகவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காட்டமாக கருத்து தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி சசிகலா அதிமுகவில் இல்லை, அதை பொருட்படுத்த வேண்டியது இல்லை என்றார்.

இன்னும் ஒரு படி மேலாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் சசிகலாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. இப்படிப்பட்ட பரபர சூழலில் அதிமுக தொண்டர்களை சந்தித்த தமது சுற்றுப்பயணத்தை சசிகலா தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முதலில் தென்மாவட்டங்களில் இருந்து அவர் தமது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் படிப்படியாக மற்ற மாவட்டங்களில் உள்ள அதிமுகவினர், தமது ஆதரவாளர்களை அவர் சந்திப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

சசிகலாவின் இந்த சுற்றுப்பயண பிளான் அதிமுக வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. விரைவில் இது கட்சி மேலிடம் முக்கிய உத்தரவை தொண்டர்களுக்கு வெளியிடும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

PREV
click me!

Recommended Stories

வெண்டிலேட்டரில் இருக்கும் காங்கிரஸுக்கும் இந்தியா கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா அதிரடி
அமித்ஷாவுடன் பேசியது என்ன? பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் விளக்கம்!